பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடீரென்று தகத்தில் சிறு விபத்துதலைகாட்டியது. ஒய்யாரமாகக் கைஅசைத்து கவரி வீசிக்கொண்டிருந்த பொம்மைகள் ஒன்றின் கவரியின் நீளமயிர், அருகிலிருந்த மெழுகுவர்த்தி நெருப்பில் பட்டு குப்பென்று தீப்பிடித்தது. நல்ல வேளையாக தகத்தின் பக்கத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்தவர்களில் சிலர் உடனேயே அதை கவனித்து பதற்றத்துடன் தீ - தீ என்று கூச்சலிட்டார்கள். கூடவே வந்த தகத்துக் காரர் வேகமாகச் செயல்பட்டு தீயை அணைத்தார். அத்துடன் கவரி வீசும் பொம்மையின் கைஇயங்குதலை நிறுத்திவிட்டார். அதன் பிறகு ஊர்வலம் அமைதியாக நகர்ந்தது. வேறு விசேஷங்களின்றி நாள்கள் போய்க் கொண்டிருந்தன. பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடராமல் வீணாகக் காலம் கழிப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று ஒருநாள் அழலானேன். - அந்தச் சமயம் வீட்டுக்கு வந்த சித்தப்பா, 'ஏன் இவன் அழுதுகிட்டிருக்கிறான்? என்று விசாரித்தார். அம்மா விஷயத்தை சொன்னாள். அவர் சிரித்தார். பரவால்லேயே புள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்னு அழுவது தான் வழக்கம். இவன் பள்ளிக்கூடத்துக்குப் போகலியே, பள்ளிக்கூடத்திலே என்னை சேர்த்துவிடுன்னு அழுறானே! நல்ல பையன் தான் என்றார். பிறகு திருநெல்வேலிக்குப் போய் பள்ளியில் சேர்கிற வரைக்கும் இவன் நம்ம ஊருப் பள்ளிக் கூடத்துக்குப் போய் வரட்டும் நான் ஸ்கூல் எட்மாஸ்டரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்று சித்தப்பா சொன்னார். அப்படியே செய்தார். ராஜவல்லிபுரம் பள்ளிக்கூடத்தை நிர்வகித்தவர் அவர் தான். அந்தப் பள்ளியை நிறுவி, அதன் மேனேஜராக அவர் செயலாற்றிக் கொண்டிருந்தார். அதனால் பிள்ளைகள் அவரை பெரியலார்வாள் என்று குறிப்பிடுவது வழக்கம் அது முதல் நான் தினசரி உள்ளுர் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்தேன். சங்கரய்யர் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். நான் வைத்திருந்த நான்காம் வகுப்புப் புத்தகங்களை அவர் பார்வையிட்டார். நம்ம ஸ்கூலுக்கும் இதே புத்தகங்களை பாடப்புத்தகங்களாக வைத்து விடலாம் என்று தீர்மானித்து, அவ்விதமே ஏற்பாடுகள் செய்தார். 98 : வல்லிக்கண்ணன்