பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 107 வரிகளில் முடிந்திருந்தது அந்தக் கவிதை, அதுதான் புதுமைப்பித்தனின் முதல் கவிதை. திருலோக சீதாராம் சென்னையில் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு நாளும், நீங்கள் கிராம ஊழியனுக்கு வந்துவிடுவது தான் நல்லது. நான் துறையூருக்குப் புறப்படும்போது என் கூடவே வந்து விடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் துறையூருக்குப் புறப்பட்ட நாளன்றும் அதையே தான் சொன்னார். ‘நவசக்தி சரிவர நடக்காது. கிராம ஊழியன் லிமிட்டெட் கம்பெனியால் நடத்தப்படுகிறது. அது நீண்டகாலம் நடக்கும். நீங்கள் ஊழியனில் சேர்வதே உசிதமானது என்றும் வலியுறுத்தினார். நண்பர் சக்திதாசன் என்னைச் சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் வந்துள்ளபோது அவர் இல்லை. அவரைப் பார்க்காது, அவரிடம் கலந்து ஆலோசிக்காது நான் வருவதற்கில்லை. அப்படி வருவது முறையல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னேன். “உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். நன்றாக யோசித்து நல்ல முடிவெடுங்கள் என்று கூறிப் பிரிந்தார் திருலோகம். நான் தனியாகவே சுற்றி சென்னை நகரைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டேன். பல இடங்களுக்கும் போனேன். இன்றைய ஜனப்பெருக்கமும், போக்குவரத்து வேகவாகனங்களின் மிகு எண்ணிக்கையும், அதனால் நெரிசலும் நெருக்கடியும் இல்லாதிருந்த நகரம் அது. மவுன்ட் ரோடில் கூட அங்கங்கே ஓங்கி வளர்ந்த மரங்கள் நின்ற காலம். திருவல்லிக்கேணியில் தென்னந்தோப்புகளும் கள்ளுக்கடைகளும் அதிகம் தென்பட்ட காலமும் கூட பக்கிங்காம் கால்வாயில் தண்ணிர் ஓடிக்கொண்டிருந்தது அந்த நீர்வழியில் படகுகள் போய் வந்தன. தண்ணிர்த்துறை மார்க்கெட் டுக்குக் காய்கறிகளும், வாழை இலைக்கட்டுகளும் படகுகள் மூலம் வந்திறங்கின. தனிப்படகுகளில் அதிகம் அதிகமாக சவுக்குக்கட்டைகள் வந்தன. கால்வாய் வழியாகப் படகில் மகாபலிபுரம் போய் வர வசதியும் இருந்தது. ஒரு முழுநிலவு இரவில் கவிஞர் பாரதிதாசனும் மற்றும் சில இலக்கிய நண்பர்களும் படகில் பயணம் செய்து மகாபலிபுரம் போய் வந்தார்கள். அந்த அனுபவத்தைக் கவிஞர் ஒரு கவிதையாகப் பாடியிருக்கிறார். காலப்போக்கில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.