பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 113 ஆரம்ப ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு எனக்குக் கடிதம் எழுதுவதாக அவர் உறுதி கூறினார். நாடகக் கலை மாநாட்டுக்கு திருச்சியிலிருந்து ‘கலாமோகினி வி.ரா.ராஜகோபாலனும் வந்திருந்தார். மகிழ்ச்சியோடு பேசிப்பழகினார். போகிறபோது, நீங்கள் திருச்சி வந்துவிட்டு சென்னை போகலாம் என்று என்னை அழைத்தார். நான் அவரோடு திருச்சி சென்றேன். பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதுகிறவர்களில் சிலர் சுலபமாகப் பிரசுர வாய்ப்பும் பெயரும் பெற ஆசைப்படுகிறார்கள். அதனால் ஏற்கனவே வேறு யாராவது எழுதி வெளிவந்த நல்ல விஷயங்களைத் திருடி, தங்கள் சொந்தச் சரக்குபோல் பேர் பண்ணுவது அதிகரித்து வந்தது. நான் எழுதிய சில உருவகக் கதைகளைக் கவிதையாக மாற்றிய முயற்சிகள் பத்திரிகைகளில் வந்திருந்தன. அவை கலைமகள், கலாமோகினி இதழ்களிலேயே இடம் பெற்றிருந்தன. இவை பற்றி எல்லாம் பேசியவாறு பயணம் செய்தோம். "இதை எல்லாம் நீங்கள் கட்டுரையாக எழுத வேண்டும். சூடாக எழுதிக் கொடுங்கள். கலாமோகினியில் அம்பலம் என்ற தலைப்பில் அதை வெளியிடலாம் என்று விராரா. சொன்னார். திருச்சியிலிருந்து திருநெல்வேலி போகலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இப்போது இதைச் சாக்கிட்டு ராஜவல்லிபுரம் போய், அங்கிருந்து கட்டுரையை எழுதிமுடிக்கலாம் என்ற நினைப்பு எழுந்தது. அவ்வாறே ராஜவல்லிபுரம் சேர்ந்தேன். இக்காலகட்டத்தில் என் அம்மாவும் தம்பியும் அவ்வூரில் வசித்தார்கள். திருநெல்வேலியில் என் அண்ணா கோமதிநாயகம் வேலை பார்த்த மெடிக்கல் ஸ்டோர்ஸ் முதலாளியின் ஆணவப் போக்கும் அதிகாரக்கெடுபிடிகளும் பிடிக்காததால், அவரும் மற்றும் சிலரும் அந்த நிறுவனத்தை விட்டு விலகியிருந்தார்கள். அண்ணா வேலையை விட்ட சில நாள்களிலேயே அம்மாவும் சகோதரர்களும் ராஜவல்லிபுரத்தில் வசிக்கச் சென்றார்கள். பின்னர், "சினிமா உலகம்’ செட்டியாரின் அழைப்பின் பேரில் அண்ணா கோயம்புத்துரர் போய்விட்டார். பெரிய அண்ணாச்சி திருநெல்வேலியிலேயே இருந்தார். நான் ராஜவல்லிபுரத்தில் இருந்து பத்திரிகைகள் பலவற்றைப் பயன்படுத்தி, கதைகள் திருடிய எழுத்தாளர்கள் பற்றி விரிவாக