பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 147 வரை சென்று கடற்கரை மணலில் வெகு நேரம் கடலையே கண்கொட்டாமல் வெரித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். பரமக்குடியில் இரண்டு வருசம் பணிபுரிந்தபோது, அங்கும் ஆற்றுக்குச் சென்றுதான் குளிப்பேன். ஆற்றில் தண்ணீர் ஒட்டம் இல்லாத கால கட்டங்களில், ஆற்றுமனலில் பள்ளம் தோண்டி இருப்பார்கள். அந்தப் பள்ளத்தில் சுத்தமான தண்ணிர் ஊறும். அதை இங்கு நம்ம பக்கதில் 'ஊத்து னனு சொல்வாங்க. "ஆத்துக்குள்ள ஊத்து வெட்டி அதிலொரு மீன் பிடித்து.” எனு ஒரு பழம் பாடல் உண்டு. ஆனால், ஆத்து ஊத்தை பரமக்குடி வட்டாரத்தில் "ஒடுகால்"ன்னு சொல்வாங்க. பரமக்குடியில் இருக்கும்வரை அந்த ஒடுகால்லதான் குளித்தேன்னார். வ.க. என் வீட்டில் தங்கி இருந்தபோது. ஒரு நாள் ரசிகமணி டி.கே.சி அவர்களின் பேரன் தீப. நடராஜன் அவர்கள் வீட்டிலிருந்து வ.க.வுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு வந்ததே ஒரு ரசமான கதை, ஒரு முறை தீப. நடராஜன் எனக்கு என் தொலைபேசி எண்ணில் போன் பேசினார். அது மாலை நேரம் நானும் வ.க.வும் என் வீட்டில் உக்கார்ந்து பலப்பல பேச்சாகப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது என் வீட்டுப்போன் மணி அடித்தது. எந்த விதத்தயக்கமும் இல்லாமல், வக இயல்பாக, என் வீட்டுப் போனின் ரிசீவரைக் கையில் எடுத்துக் காதருகே வைத்துக் கொண்டு “ஹலோ” என்றார். வக ஹலோ என்று சொன்ன ஒரே வார்த்தையின் ஒலிப்பு முறையை வைத்தே தீப. நடராஜன் எதிர்முனையில் பேசுவது வ.க.தான் என்று தெரிந்து கொண்டு. போனில் "ஐயா, நான் தென்காசியில் இருந்து தீப. நடராஜன் பேசுகிறேன். நீங்கள் எப்ப, அங்கு கழுநீர்குளத்திற்கு வந்தீர்கள்” என்று கேட்டார். "அது ஒரு பெரிய கதை அதைப்பின்னால் சொல்கிறேன். நீங்கள் கழனியூரனிடம் பேகிறீர்களா. அவரிடம் ரிசீவரைக் கொடுக்கட்டுமா. ”என்று வக கேட்டார். அதற்கு தீப. நடராஜன், “நான் அவரிடம் எப்ப வேணாலும் பேசிக்கிடுவேன். உங்கட்ட பேசுனதுல ரொம்ப மகிழ்ச்சி, நீங்க ரெண்டு பேரும். நாளைக்கே புறப்பட்டு எங்க வீட்டுக்கு வரணும். அங்க கழுநீர்குளம் வரை வந்துட்டு இங்க எங்க வீட்டுக்கு வராம