பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 & நிலைபெற்ற நினைவுகள் இருந்தது. வ.க. இளம் இருளில் உக்காந்தபடியே வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர், இனிது, இனிது . ஏகாந்தம் இனிது. எனத்தொடங்கும் மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை வாய்விட்டுப் பாடினார். அப்போதுதான் பாரதியாரின் அந்தக் கவிதைக்கு உரிய உண்மையான பொருளை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சுமார் அரைமணி நேரம் அந்த ஏகாந்தத்தின் இனிமையை ரசித்தபின் "சரி, வாருங்கள், வீட்டிற்குப் போவோம்” என்றார் வக அதன் பின் வண்டியில் அவரை ஏற்றிக் கொண்டு வீடு வந்து சோர்ந்தேன். வக என்னோடு தங்கி இருந்த நாட்கள் மிக இனிமையாகவும் இலக்கிய ரசனையானதாகவும் கழிந்தது. ஒவ்வொருநாளும் மாலை வேளையில் நானும் வகவும். பொடி நடையாக நடந்து கால்வாய் கரை வழியாக, குளக்கரைக்குச் சென்று அங்குள்ள கோயில் மரத்தடியில் உட்கார்ந்து பேசினோம். அப்படிப் பேசும்போதுதான் நாட்டுப்புறவியலில் வ.க.வுக்கு நிறைய புலமை இருக்கிறது என்பது தெரிந்தது. அந்திக் கருக்கலில் குளத்தின் கரையோர மரத்தடியில் நன்கு இருட்டும் வரை மணிக் கணக்கில் எனக்கு பல நாட்டுப்புறக்கதைளையும், சில நாட்டு நடப்புகளையும், விடுகதைகளையும், நாட்டுப்புறப்பாடல்களையும் சொன்னார் வ.க. சுமார் கால் நூற்றாண்டு காலமாக நாட்டார் தரவுகளில் கவனம் செலுத்தி வருகிற எனக்கே, அவர் அப்போது சொன்ன நாட்டார் தரவுகள் மிகவும் புதுமையாக இருந்தன. அவருக்குள் மிகப்பெரிய நாட்டார் தகவல் களஞ்சியம் புதைந்து கிடக்கிறது என்பதை அன்றைய அந்திப் பொழுதில் நான் தெரிந்து கொண்டேன். அதனால் தான் நான் கதை சொல்லி இதழின் பொறுப்பாசிரியரானதும், முதல் காரியமாக வ.க.விடம் படைப்புகள் அதுவும் நாட்டுப்புறவியல் தொடர்பான படைப்புக்களை அனுப்புங்கள் என்று கேட்டேன். அவரும் அனுப்பி உதவினார். நான் பொறுப்பாசிரியராக இருந்து தயாரித்த நான்கு கதை சொல்லி இதழ்களிலும் (எண் : 17, 18, 19, 20) வ.க.