பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 19 துணையும் ஒத்துழைப்பும் வழிகாட்டலும் அவசியம் தேவை என்று நெல்லை வாலிபர்கள் கருதினார்கள். சங்க நண்பர்கள் தங்கள் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். நெல்லை வாலிபர் சங்கத்தின் தலைவராக நான் இருக்க வேண்டும் என்றும், ஒரு பத்திரிகை தொடங்கி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, எழுதுவதில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நான் மறுத்தேன். ஒரு பத்திரிகை தொடங்கி, கதைகள் கட்டுரைகள் கவிதைகள் சேகரித்தால், நான் பார்வையிட்டு வேண்டிய உதவிகளைச் செய்யலாம் என்று சொன்னேன். பலரும் எழுதித் தருகிற விஷயங்களை ஒரே கையெழுத்தில் பிரதி பண்ணி பத்திரிகையை அமைக்க வேண்டும்; அப்போது தான் இதழின் தோற்றம் நன்றாக இருக்கும் என்றும் கூறினேன். சங்க உறுப்பினர்களில் எவரது கையெழுத்தும் நன்றாக இராது; நீங்களே முழுப் பொறுப்பும் ஏற்று உரிய முறையில் பத்திரிகையை நடத்தி சங்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வேண்டினார்கள். நான் எவ்வளவு மறுத்தும் அவர்கள் கேட்பதாயில்லை. முடிவில் நான் நெல்லை வாலிபர் சங்கத்தின் தலைவரானேன். 'இளந்தமிழன்’ என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை மாதம் தோறும் தயாரித்துக் கொடுக்கவும் இசைந்தேன். எழுத முடிந்தவர்கள் கதை, கட்டுரை, கவிதை என்று ஏதாவது எழுதித் தரவேண்டும்; இதுவரை எழுதாதவர்கள் நாமும் எழுதவேண்டும் எனும் மன அரிப்பு பெற்றிருப்பவர்கள் அவர்களால் இயன்றவரை முயன்று ஏதாவது எழுதிக்கொடுக்க வேண்டும். அவற்றைத் திருத்தி வெளியிடலாம் என்று தெரிவித்தேன். சங்க நண்பர்கள் உற்சாகமாகத் தலையாட்டின்ார்கள். முதல் இதழுக்கு அநேகர் எழுதித்தந்தார்கள். தி.க.சிவசங்கரன், தி.ப.திருஞானசம்பந்தம் இருவரும் ஆர்வத்தோடு எழுதினார்கள். ஒவ்வொரு இதழுக்கும் ஏதாவது எழுதிக் கொடுத்தார்கள். மற்றவர்கள் இரண்டாவது இதழுக்குக் கூட எழுத ஆர்வமில்லாதவர்கள் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு இதழையும் நல்ல முறையில் தயாரித்தேன். மற்றவர்கள் எழுதித் தந்ததைத் திருத்தி, 'இளந்தமிழன்’ இதழில்