பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 x நிலைபெற்ற நினைவுகள் அந்த சந்தர்ப்பத்தில் சுப. நாராயணன் அங்கு விற்பனைப் ரிவின் மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். நல்ல ந்தனையாளர் பிற்காலத்தில் நல்ல எழுத்தாளராக அவர் வளர்ச்சி பெற்றார். அவர் என் எழுத்துக்களிலும், எனது தமிழ் நடையிலும் வியப்பும் மதிப்பும் கொண்டிருந்தார். எனவே அவர் மாதம் தோறும் எனக்கு பத்துப் பிரதிகள் அனுப்ப ஏற்பாடு செய்தார். அவை விற்பனையானதும் உடனேயே பணத்தை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். விற்பனையாளருக்கு உரிய கமிஷனைக் கழித்துக்கொண்டு பணம் அனுப்பினால் போதும் என்று சுப. நாராயணன் தெரிவித்திருந்தார். វ្នំ இ இலக்கிய நண்பர்கள் 'சக்தி யை ஆவலுடன் வரவேற்றார்கள். விரும்பி வாசித்தார்கள். அதன் விஷயச் சிறப்பைப் பேசி மகிழ்ந்தார்கள். விரைவிலேயே சக்தி'யின் விற்பனை ஐம்பது பிரதிகளை எட்டியது. சக்தி அலுவலகம் முன்பணம் கேட்காமலே அதிக அளவு பிரதிகளை அனுப்பி உதவியது. மாதங்கள் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தன. நான் எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேற வேண்டும் என்ற உந்துதலோடு ஊக்கமாகவும் உற்சாகமாகவும் எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகள் பலவும், நான் எழுதி அனுப்புகிற வற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு வெளியிட்டன. இதுவும் என் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. பத்திரிகைகள் என் எழுத்துக்களுக்காக எனக்குப் பணம் தர வேண்டும் என்று நான் எண்ணவும் இல்லை; எதிர்பார்த்ததும் இல்லை. முதன்முதலாக எழுத்து மூலம் எனக்கு சன்மானம் என்று கிடைத்தது ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்துதான், 'புன்னைகையும் புதுநிலவும் என்ற எனது கதையை வெளியிட்ட விகடன் பதிமூன்று ரூபாய் எட்டணா சன்மானம் அனுப்பி என்னை மகிழச் செய்தது, கதை எழுதி அடுத்து நான் பெற்ற வருமானம் 'இந்திரா இதழிலிருந்து. அது நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது சிறுகதை தெருக்கூத்து க்காக நூறு ரூபாய் வந்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகைதான். அதன் பிறகு இந்திரா இதழ் தோறும் என் கதைகளை வெளியிட்டு வந்தது. ஆயினும் எனக்கு பணம் எதுவும் தரவில்லை. அவ்வப்போது என் கதைகளை வெளியிட்டது கலைமகள்'. அதுவும் எனக்குப் பணம் தந்ததில்லை. புதுமைப் பித்தன், கு.ப.