பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஜ் 47 தங்கிவிட்டு நாளைக்குப் போகலாம் என்று சொல்லி, ஒரு ரூபாய் கொடுத்தார். நேரமாச்சு, நான் போகிறேன் எனக் கூறி சைக்கிளில் ஏறிச் சென்றார். நான் மதுரை சேர்ந்தேன். டவுன் ஹால் ரோடில் ஒரு ஒட்டலில் இட்டிவி தோசை காப்பி சாப்பிட்டேன். அந்நாள்களில் உணவுப் பொருள்களின் விலை மிகவும் குறைவுதான். ஒரு ரூபாய்க்கு வயிறார உணவு சாப்பிட முடியும். திரும்பவும் போய் கோபாலைச் சந்திப்பதற்கு நேரம் இருந்ததால் நான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கு ஒய்வாகத் தங்கின்ேன். அங்கே ஒரு சுவரில் ரயில் நிலையங்களின் பெயர்கள், உரிய கட்டணங்கள் முதலிய விவரம் அச்சிட்ட பெரிய நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதில் காரைக்குடிக்கு எவ்வளவு கட்டணம் என்று பார்த்தேன். மூன்று ரூபாய் தான். அக்காலத்தில் ரயில்வே பயனக் கட்ட்னங்களும் மிகக் குறைவாகத் தான் இருந்தன. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்குக் கட்டணம் எட்டே ரூபாய் தான். (இப்போது இருநூறு ரூபாய்க்கும் அதிகம்.) நேரமானதும் கோபாவின் பயிற்சி நிலையம் சென்று, அவருக்காக வெளியே காத்து நின்றேன். அவர் வந்ததும், ‘சாப்பிட்டாயா? என்று அன்பாக விசாரித்தார். 'வா, டோவோம், நான் இருக்கிற இடம் பக்கத்திலே தான்’ என்று அழைத்துப் போனார். அது பல அறைகள் கொண்ட அமைதியான கட்டிடம். இனிய சூழல், அறைக்குள் ஒருவராகப் பல பயிற்சி மாணவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். ஒரு உணவு விடுதியிலிருந்து அவர்களுக்கு சாப்பாடு ஒவ்வொரு வேளையும் வந்தது. அன்று அவரோடு உணவு உண்டு, இரவு அங்கேயே தங்கினேன். அவரும் பக்கத்து அறை நண்பர்களும் அவரவர் சிரமங்கள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும் பணம் பற்றாக்குறை ஏற்படுவதையும் எதிர்பாராத செலவுகள் வந்து சேர்வதையும் கூறி மனசுக்கு ஆறுதல் தேடிக் கொண்டார்கள். கோபாலுக்கு அந்த மாதம் எதிர்பாராத செலவுக்கு வழிசெய்பவனாக நான் வந்துள்ளதை எண்ணினேன். எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்ன செய்ய! மறுநாள் காலையில் விழித்தெழுந்து, அங்கேயே கிணற்றில் குளித்தேன். சாப்பிட இட்டிலி கிடைத்தது. இன்று நீ ஊருக்குப்