பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்து நாட்களுக்குப் பிறகு நான் வீடு திரும்பினேன். வீட்டுச் சொந்தக்காரர் பரிகாசமாகக் குறிப்பிட்டதுபோல, போன மச்சான் திரும்பி வந்தான் வெறும்கையோட என்ற தன்மையில் தான். சகோதரர்கள் என்னைச் சந்தோஷத்தோடு வரவேற்றார்கள். என் அனுபவங்களை ஆவலோடு கேட்டறிந்தார்கள். அம்மா தான் மனத்துயரத்தோடு குறை கூறினாள். - நான் வீட்டைவிட்டுப் போனதும், போனது போல் வெறுமனே திரும்பி வந்ததும் எனக்கு ஏமாற்றமாகவோ தோல்வியாகவோ படவில்லை. எல்லாமே புதிய அனுபவங்கள் என்றுதான் நான் கருதினேன். பத்திரிகை அலுவலகங்களைப் பார்த்ததும், பத்திரிகைகள் சம்பந்தபட்டவர்களைக் கண்டு பழன முடிந்ததும் எனது அனுபவங்களை விசாலப்படுத்தியதாகவே நா மதிப்பிட்டேன். எனது நாள்கள் எப்போதும்போல் நகரலாயின. படிப்பதும் எழுதுவதுமே எனது முக்கிய வேலையாக இருந்தது. யுத்த காலம் என்ற பேச்சு எங்கும் அடிபட்டது. ஐரோப்பாவில் உலகமகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. அது தமிழ்நாட்டைப் பெரிதாக பாதித்துவிடவில்லைதான். என்றாலும் அதன் தாக்கம் பல வகைகளிலும் உணரப்பட்டு வந்தது. விலைவாசிகளின் உயர்வு, அவசியப் பொருள்களின் பற்றாக்குறை: முக்கியமான சில சாமான்கள் சந்தையில் இல்லாமல் போவது, ஆயினும் அதிகமான பணம் கொடுத்தால் 'கறுப்பு மார்க்கெட்'டில் அப்பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதுஇப்படிப் பலப்பல. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர், யுத்தத்துக்குப் போகிறேன்