பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 67 பத்திரிகைக்குப் பல இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் அனுப்பிய கதைகள் படித்துப் பார்க்கப்படாமலே கட்டுக்கட்டாக இருந்தன. அவ்வெழுத்துப் பிரதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து, பத்திரிகையில் வெளியிடலாம் என்று தோன்றிய கதைகளைத் தனியாக எடுத்து வைத்தேன். அந்தச் சமயத்தில் அகிலன் புதுக்கோட்டையில் இருந்தார். ஒரு நாள் அவர் வந்து என்னை சந்தித்தார். சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். க. நாராயணன் என்ற எழுத்தாளரும் புதுக்கோட்டையில் வசித்தார். காகித விற்பனைக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். காண்டேகர் பாணியில் வாழ்க்கைத் தோணி’ எனும் நாவலை எழுதிப் பெயர் பெற்றார். 'தாய்நாடு’ என்ற சிற்றிதழைச் சிறிது காலம் நடத்தினார். இவை பிற்காலத்திய நிகழ்வுகள். ‘அணிகலம்’ பத்திரிகை ஆசிரியர் கதிரேசன் செட்டியாரை ஒருநாள் அவர் வீட்டில் சந்தித்தேன். எனது வளர்ச்சிக்கு உதவிய பத்திரிகைகளில் அணிகலம் இதழும் ஒன்று. கதிரேசன் செட்டியார் நடுத்தர வயதினர். வெகு எளிமையாகக் காணப்பட்டார். 'அணிகலம்’ இதழைத் தரமான சிறுபத்திரிகையாக உருவாக்கிய அவர் அதை ஒரு குடிசைத் தொழிலாகவே நடத்தினார் என்று சொல்லலாம். பத்திரிகை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் அவர் ஒருவராகவே கவனித்துக் கொண்டார். சிக்கனத்தில் கருத்து உடையவர். தபால் கார்டில் எவ்வளவு அதிகம் எழுத முடியுமோ அவ்வளவு வரிகளை நுணுக்கமாக எழுதுவார். 'எதையும் வீணடிக்கக் கூடாது. துண்டுக் காகிதத்தைக்கூட ஏதாவது எழுதப் பயன்படுத்த வேண்டும். சில பேர் தபால் கார்டில் இரண்டு வரி மூன்று வரிகள் மட்டும் எழுதி அனுப்புகிறார்கள். அது பெரிய வீணடிப்பு. கார்டுகளை வீணடிப்பது தப்பு’ என்று அவர் கூறுவது உண்டு. ஒருநாள் மாலை வி.ரா. ராஜகோலன் புதுக்கோட்டைக்கு வந்தார். இரவில் என்னோடு தங்கினார். 'திருமகள் நிலைமை பற்றி விசாரித்தார். நான் உள்ள நிலவரங்களைச் சொன்னேன். 'திருமகள் நிலைமை சிரமம் என்று தான் தெரிகிறது. கூடிய வரை சமாளியுங்கள். வேறு வாய்ப்பு ஏதாவது கிட்டுமா என்று பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு, மறுநாள் காலையில் அவர் திருச்சி சென்றார். வாய்ப்பு சில நாள்களிலேயே தேடி வந்தது.