உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 : நிலைபெற்ற நினைவுகள் வாழ்ந்தார். இறுதியில் தேய்ந்த நிலவு ஆகி, அநாதை மாதிரி வாழ்ந்து, கவனிப்பாரின்றி செத்துப்போனார். வாழ்க்கையும் காலமும் எவ்வளவோ பாடங்களைப் புகட்டியவாறே நகர்கின்றன. ஒருநாள் பி.எஸ். செட்டியார் என்னிடம் சொன்னார், இளங்கோவன் கோயம்புத்துர் வந்திருக்கிறார். ராயல் இந்து ரெஸ்டாரன்ட் மாடியில் தங்கியிருக்கிறார். உங்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்று சொன்னார். போய் பார்த்துவிட்டு வாங்க என்றார். போனேன். திரைப்பட வசனகர்த்தா என்று பெயரும் புகழும் பிரமாதமான பணவருவாயும் பெற்றிருந்த நிலை அப்போது அவருக்கு. அந்தக் காலத்திலே நம்ம ஆபீசுக்கு வந்து போகையிலே இளங்கோவன் ரொம்ப மெலிந்து, சாதாரண ஆளாகத் தென்பட்டார். வேர்க்கடலையை வாங்கித் தின்று ஜமீன்தார் மாதிரி இருக்கிறார். பழைய காலம் அவருக்கே நினைப்பிலே இராது என்று பி.எஸ். செட்டியாரின் மனைவி ஒருமுறை சொன்னார். வசதியற்ற எழுத்தாளராக இருந்த இளங்கோவன் தோற்றத்தை நான் போட்டோக்களில் பார்த்திருக்கிறேன். இப்போது கோவையின் பெரிய ஒட்டலின் வசதியான மாடியில் தங்கியிருந்த இளங்கோவன் கவலையில்லாத மனிதனாய், தண்டியும் சதையுமாக’ அளவுக்கு மீறிய பருத்த உடலராய், காட்சியளித்தார். தரையில் பரப்பிய விரிப்பின் மீது சம்மணமிட்டு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டதும், சாப்பிடுறியா?’ என்று உபசரித்தார். வேண்டாம்; நான் சாப்பிட்டாச்சு என்று தெரிவித்தேன். பத்திரிகைகள், எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றி அவர் விசாரித்தார். அவரும் தன் எண்ணங்களைச் சொன்னார். திடீரென்று, நீ ஏன் சினிமா உலகம் பத்திரிகையிலேயே இருக்கிறே? வேறே நல்ல பத்திரிகை எதிலாவது சேர்ந்து வேலை பார்க்கிறது தானே? சென்னையிலே தினமணி பத்திரிகைக்குப் போய் சேரு. ஒழுங்கா சம்பளமும் கிடைக்கும். நல்ல எதிர்காலமும் கிட்டும். சினிமா உலகம் பத்திரிகையிலே வளர்ச்சிக்கே இடம் கிடையாது. செட்டியார் என்ன சம்பளம் தந்திடப்போறாரு என்று இளங்கோவன் பேசினார்.