பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 91


ஒட்டக்காரரும் தான் வளைவில் ஒடக்கூடியதாக இருக்கும்.


ஆகவே வலதுகையில் தடிகொண்டு ஓடினால், ஒட வசதியாகவும், ஒடும்பாதையின் இடப்புறத்திலே நின்று ஒடுவதால் ஒடும் தூரம் குறைவாகவும் இருக்கும். ஆகவே ஒடும் நேரம் குறையும் என்று கூறுகின்றனர். இக்கருத்து ஒத்துக்கொள்ளக் கூடியதுதான் என்றாலும், பயிற்சி செய்கின்ற முறையிலும் பக்குவத்திலும் தான் பலன்பெற முடியும்.


2. பார்த்து வாங்கும் முறை:400 மீட்டர் தொடரோட் டத்திற்கும், மற்றும் நீண்டது.ார தொடரோட்டமுறைக்கும் இவ்வழி பொருந்தும்.


400 மீட்டர் தூரத்தை விரைவாகக் கடந்தோடி வரும் ஒட்டக்காரர், ஆரம்ப வேகத்தை இழந்து, களைப் புடனே வந்து சேருவார். வாங்க இருக்கும் இரண்டாம் ஒட்டக்காரர், வேகமாகத் ஒடத் தொடங்கிவிட்டால், முன்னவரால் ஓடிவந்து தடியைக் கையிலே தரமுடியாது.


ஆகவே, கைத்தடியை மாற்றும் எல்லையின் தொடக்கத்திலே நின்றுகொண்டு, அருகில் வந்தவுடன், எவ்வளவு தூரம் கையை நீட்டி வாங்க முடியுமோ, அந்த