பக்கம்:நீலா மாலா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109 கொலை பண்ணினேன். அதற்குப் பதிலாக என் மகளைப் பறிகொடுத்து விட்டேன்...என் மகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. கூடவே, என் சம் சாரத்தையும் பறிகொடுத்து விட்டேன். மகள் இறந்த துக்கம் தாங்காமல் அவளும் கஞ்சைத் தின்று செத்துப் போய் விட்டாளாம்...பாவம், தன் புருஷன் கொள்ளைக்காரனுக, கொலைகாரனுக இருந்தால், எந்தப் பெண்பிள்ளையாலே காலு பேருக்கு நடுவே நிம்மதியாக, கெளரவமாக வாழ முடியும்? என் குடும்பமே அழிந்து போய்விட்டது! பெற்ற குழங்தையையும் கட்டின மனைவியையும் கடைசி கிமிஷத்திலேகூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நான் எத்தனையோ பேரை அழவைத் தேன். அலற வைத்தேன்; குத்திக் காயப்படுத்தி னேன்; கொலை பண்ணினேன். கடவுள் கொடுத்த கையும் காலும் கன்ருக இருந்தும், கான் உழைத்துப் பிழைக்கவில்லை. ஊரைக் கொள்ளையடித்துப் பிழைத்தேன். ஏராளமான பணத்தைக் கொள்ளை யடித்தேன். ஆனல், நான் கொள்ளையடித்த பணத்திலே ஒரு காசுகூட, சாகக் கிடந்த என் மகளுக்கு மருந்து வாங்கப் பிரயோசனப்படவில்லை. ஐயோ...!" தலைமயிரைப் பிடித்துக்கொண்டு சங்கிலி யாண்டி அழுதான். தாரை தாரையாக அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. துக்கம் தொண் டையை அடைக்க, அவன் மேலும் சொன்னன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/111&oldid=1021672" இலிருந்து மீள்விக்கப்பட்டது