பக்கம்:நீலா மாலா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

"நீயும் நீலாவும் நாளை இரவு பட்டணத்துக்குப் போகப் போகிறீர்களே! உங்களது அருமை பெருமைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே இத்தனை நாளும் இருந்து விட்டேன். இப்போது கன்ருகத் தெரிந்து கொண்டவுடனே, நீங்கள் என்னைவிட்டு வெகுதூரம் போகப் போகிறீர்களே” என்று துக்கத்தோடு கூறினுள் பார்வதி அம்மாள். 'ப்பூ, இதற்குத்தான அழுதீர்கள்! கவலைப் படாதீர்கள் அம்மா. லீவு விடுகிறபோதெல்லாம் இவர்களை நான் இங்கே அனுப்பி வைக்கிறேன்' என்று ஆறுதல் கூறினுள் நளினி. அந்தச் சமயம், சார், தந்தி’ என்ற குரல் கேட்டது. "என்ன, தந்தியா! யாருக்கு?’ என்று கேட் டார் பரமசிவம் பிள்ளை. 'உங்களுக்குத்தான்’ என்று கூறித் தந்தியை கீட்டினர், தங்திச் சேவகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/119&oldid=1021681" இலிருந்து மீள்விக்கப்பட்டது