பக்கம்:நீலா மாலா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136 மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு கஸ் துரிபா கல்வி நிலையத்தில் பிரார்த்தனை கடந்தது. பிறகு, தலைமை ஆசிரியை தங்கம்மாள் பேச ஆரம் பித்தார்: 'அருமைமிக்க ஆசிரியைகளே, அன்புமிக்க மாணவிகளே, இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி யைக் கூறப் போகிறேன். நமது பள்ளி மாணவி. மாலாவும், அவளது சிநேகிதி நீலாவும் ஒரு திருட இனப் பிடித்துக் கொடுத்ததாகப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். கேற்றுவரை மாலா மட்டுமே நம் பள்ளி மாணவியாக இருந்தாள். இன்று நீலா வும் கம் பள்ளி மாணவியாகிவிட்டாள்! ஆம், இன்று நீலாவும் கம் பள்ளியில் சேர்ந்துவிட்டாள். இப்போது மாலாவும் நீலாவும் உங்கள் முன்னுல் வந்து கிற்பார்கள்’ என்றதும் மாலா, நீலாவின் கையைப் பிடித்து அழைத்துவந்தாள். இருவரும் தலைமை ஆசிரியையின் இருபுறமும் கின்று எல்லா ருக்கும் வணக்கம் செய்தார்கள். உடனே, மற்ற மாணவியர் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆர வாரம் செய்தார்கள். அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்த தும், வரவேற்பு அறையில் இருந்த ஒருவர், குழங் தைகளே, உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்' என்ருர். அவர் அருகிலே காமிராவுடன் ஒருவர் கின்று கொண்டிருந்தார். என்ன சார் வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டே மாலா அவர் அருகிலே சென்ருள். நீலா வும் கூடவே போனுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/138&oldid=1021706" இலிருந்து மீள்விக்கப்பட்டது