பக்கம்:நீலா மாலா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

3{} அந்த ஆண்டு, திருவிழா கடப்பதற்கு இன் னும் இரண்டு நாட்களே இருந்தன. விழா வேலை யாகப் பூங்குடிக்கு நான்கு மைல் தூரத்திலுள்ள அமரபுரத்துக்குச் சென்றிருந்த குமாரசாமி, அன்று பகல் இரண்டு மணிக்குத் திரும்பி வந்தார். பஸ்ஸிலிருந்து அவர் இறங்கும் சமயம்,

  • தி.ஐயோ தி தி :

"ஐயோ : அம்மா” என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன. சத்தம் வந்த திசையில் பார்த்தார் குமாரசாமி. சிறிது துரத்திலிருந்த அரிஜனக் குடியிருப்பில் தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்த காட்சியைக் கண் டார். உடனே, அருகில் இருந்தவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு ஓடினர். குடிசைக்குள் இருங் தவர்கள் துரக்க முடிந்த சாமான்களை யெல்லாம் துக்கிக்கொண்டு வெளியில் ஓடி வந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் அருகில் இருந்த பெரிய கிணற்றில் தண்ணிரை இறைத்துப் பானைகளில் கொண்டுவந்து கொட்டினர்கள். ஆ ைல், தி அ2ணயவில்லை. கொழுந்துவிட்டு எரிந்து கொண் டிருந்தது. காற்றும் கலந்து கொண்டதால், தீ வெகு விரைவிலே பக்கத்துக் குடிசைகளுக்கும் பரவியது. பரபரப்பு, கூச்சல், குழப்பம்-இத்தனைக்கும் இடையே, அம்மா! அம்மா !” என்று வீரிட்டு அலறும் குரல் கேட்டது. அப்பொழுது ஒரு குடி சைக்குப் பக்கமாகச் சென்ற குமாரசாமி, ஐயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/32&oldid=1021583" இலிருந்து மீள்விக்கப்பட்டது