பக்கம்:நீலா மாலா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

愛き。 எப்போதும் பாட்டியையே கதை சொல்லும்படி கச்சரிக்கும் பாலா, இன்று பாட்டிக்குக் கதை சொல் லுகிருளாம்! பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. 'மாலா! நீயா கதை சொல்கிருய்? சொல்லு, சோல்து!’ 'பாட்டி, ஒரே ஒரு ஊரிலே ஒரு பையன் இருக் தார்’. "என்ன பையன் இருந்தாரா இருந்தான் என்றுதான் சொல்லணும்' "ஐயையோ அவன், இவன் என்று சொல்ல லாமா? தப்பு, தப்பு!” ... கதைதானே, சொல்லலாம். சொல்லு” "சரி, அந்தப் பையன் மிகவும் கெட்டிக்காரனம். ஒவ்வொரு பாடத்திலேயும் தொண்ணுாறுக்கு மேலேதான் மார்க் வாங்குவாணும். எஸ் எஸ்.எல்.சி. யிலே தமிழ் நாட்டிலேயே அதிக மார்க் வாங்கியது அவன்தானும் பத்திரிகைகளில் எல்லாம் அவன் படத்தைப் போட்டு, இவன் மிகவும் ஏழை; அப்பா அம்மா இல்லை. தாய்மாமன்தான் இவனே மிகுந்த சிரமப்பட்டுப் படிக்க வைத்தார்’ என்றெல்லம் எழுதியிருந்ததாம். அதைப் பார்த்த ஒரு பெரியவர் உடனே அந்தப் பையனை வரவழைத்து, அவனுக்கு வேண்டிய உதவி யெல்லாம் செய்வதாகச் சொன்ன ராம்; சொன்னபடியே செய்தாராம். அந்தப பையன் மேலும் மேலும் நன்ருகப் படித்து அவருடைய உதவியாலே டாக்டர் ஆகிவிட்டானும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/50&oldid=1021601" இலிருந்து மீள்விக்கப்பட்டது