பக்கம்:நீலா மாலா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 இப்படிச் சொன்னதும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டியும் அம்மாவும் சிரித்தார்கள். 'என்ன பாட்டி சிரிக்கிருய் ? டாக்டரான பிறகும் அவன்"என்று சொன்னேனே,அதற்காகவா? சரி, இனிமேல் அவர் என்றுதான் சொல்வேன். அந்த டாக்டர் முப்பங்தைந்தாவது வயதுக்குள்ளே மூளை வியாதி, நரம்புவியாதிகளை யெல்லாம் குணப் படுத்துவதிலே மிகவும் கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்து விட்டாராம்! பத்ம பூஷண் விருதுகூடப் பெற்று விட்டாராம்!” "அது சரி, உன் கதையிலே வருகிறவர் யாரென்று சொல்லி விடட்டுமா மாலா?? 'உம், சொல்லு பாட்டி, சொல்லு பார்க்கலாம்.” "அவர்தான் என் அருமைப் பேத்தி மாலா வினுடைய அப்பாவாம். டாக்டர் சூரியசேகர்தான் அவர் பெயராம்..” என்று சொல்லிவிட்டுப் பாட்டி சிரித்தாள். மாலாவும் அவள் அம்மாவும் கூடச் சிரித் தார்கள். 'கண்டு பிடித்து விட்டாயே பாட்டி! என் அப்பாவுக்கு உதவி செய்து படிக்க வைத்தாரே, அவருடைய பெயர் தெரியுமா?’’ "ஏன் தெரியாது? உன் அப்பாதான், உங்கள் வீட்டு, முகப்பிலும் பூசை அறையிலும் அவருடைய பெரிய படத்தை மாட்டி வைத்திருக்கிருரே! கதிரேசர் இல்லம், கதிரேசர் மருத்துவ மனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/51&oldid=1021602" இலிருந்து மீள்விக்கப்பட்டது