பக்கம்:நீலா மாலா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

5? சியோடு பார்த்தார். மாலா, கதிரேசன் செட்டி யார் ஒரு பெரிய வள்ளல் ! எத்தனையோ பேருக்கு. உதவி யிருக்கிருர். அவரது உதவியைப் பெற்ற வர்கள், இன்று ஆயிரக் கணக்கான பேருக்கு உதவி வருகிருர்கள். கதிரேசன் செட்டியாரைப் பார்ப்ப தற்கு முன்பு, நான்கூட ஒரு கஞ்சனகத்தான் இருந்: தேன். அவரைப் பார்த்தபிறகுதான், அவர் வாரி, வாரி வழங்குவதைக் கேட்ட பிறகுதான், எனக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண் ணமே வந்தது...... ' என்று பரமசிவம் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

  • அது சரி, கதிரேசன் செட்டியார் பெரிய லட்சாதிபதி. அவர் தருமம் செய்யலாம். நம்மாலே முடியுமா ?’ என்ருள் பார்வதி அம்மாள்.
  • பார்வதி, அவரைப் போல் நான் பெரிய பணக்காரன் இல்லை. அவரைப் போல் நம்மாலே பெரிய தருமம் செய்யவும் முடியாது. ஒப்புக் கொள்ளுகிறேன். ஆ ன லு ம், கடவுள் ஒரள வுக்கு நமக்கு கன்ருகத்தானே கொடுத்திருக்கிருர் ? கம்மாலே முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவலாம் அல்லவா?. சரி, சரி, இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால் நேரமாகிறது. தாமரைக் குளத்துக்குப் பக்கத்திலே குடியிருக்கிருரே கணக்கப் பிள்ளை, அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன். என்னடா ரவி, என்ன மாலா, போய் வரட்டுமா ?’ என்று கூறி ரவியைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து விட்டு வெளியே புறப்பட்டார் பரமசிவம் பிள்ளை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/53&oldid=1021604" இலிருந்து மீள்விக்கப்பட்டது