பக்கம்:நீலா மாலா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53 " தாமரைக் குளம் என்று தாத்தா சொன்ன தும், அடடே, அதை அப்படியே அரைகுறை யாக விட்டு விட்டேனே !! அடியோடு மறந்தே போனேன் ' என்று மாலா தனக்குத் தானே சொல் லிக் கொண்டாள். மாலா சென்னையிலிருந்து வந்தாளே, அதற்கு அடுத்த நாள் காலையிலே, தாத்தா மாலாவை அழைத்துக் கொண்டு, ஊருக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களைப் பார்வையிடச் சென்ருர், செல்லும் வழி யில்தான் தாமரைக் குளம் இருக்கிறது. அந்தக் குளத்திலே ஒரு பக்கத்தில்.அழகாகப் பூத்திருந்த தாமரை மலர்களைக் கண்டதும், மாலா அங்கேயே நின்று விட்டாள். - ' என்ன மாலா, தாமரைப் பூ வேணுமா ? இதோ பறித்துத் தருகிறேன்’ என்று பரமசிவம் பிள்ளை கூறிக் குளத்திலே இறங்கினர். முழங் கால் அளவு தண்ணிரில் கின்று கொண்டு, கைக்கு எட்டிய துரத்தில் இருந்த ஒரு தாமரைப் பூவைப் பறித்தார்; மாலாவிடம் கொடுத்தார். மாலா சிறிது கேரம் அந்தக் குளத்தையே பார்த். துக் கொண்டிருந்தாள். குளத்திலிருந்த தாமரை மலர்களையும் அங்கே நீந்திய வாத்துக்களையும், கரை ஓரத்திலே கல்லிலே துணி துவைத்துக். கொண்டிருந்த இரண்டு மூன்று மனிதர்களையும் பார்த்தாள். பிறகு, குளத்தைச் சுற்றி இருந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/55&oldid=1021606" இலிருந்து மீள்விக்கப்பட்டது