பக்கம்:நீலா மாலா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 முடியாது. அவர்கள் ஏழையாகப் போனதனுலே நான்தான் அவர்களை இளப்பமாக நினைத்து விட் டேன் ' என்று பாட்டி கூறிக் கொண்டிருக்கும் போதே, மாலாவின் அம்மா களினி குறுக்கிட்டாள்:

  • அம்மா கதிரேசன் செட்டியாரிடத்திலே மாலாவினுடைய அப்பா எவ்வளவு விசுவாசமாக இருக்கிருர்! அதேபோல உங்களிடத்திலும், அப்பா விடத்திலும் நீலாவும், அவள் அம்மாவும் விசுவாச மாக இருக்கிருர்கள். மாலாவின் அப்பா ஒவ்வோ ராண்டும் எத்தனையோ ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், துணி, ரொக்கமாகப் பணம் எல்லாம் கொடுத்து வருகிறர்கள். நீ லா வும் பட்டணத் துக்கு வந்தால், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கும்.'

"ஆமாம் பாட்டி, நீலாவை காங்கள் திரும்பிப் போகிறபோது அழைத்துப் போகட்டுமா?’ என்று குழைவாகக் கேட்டாள் மாலா. 'நீங்கள் எல்லாரும் ஒரே கட்சியில் இருக் கிறீர்கள். நான் ஒருத்தி மட்டும் எதிர்க்கட்சியிலே இருக்கலாமா? உங்களோடே சேர வேண்டியது தான். சரி, உங்கள் விருப்பப்படியே நீலாவை அழைத்துப் போங்கள்' போட்டி,நீலா சென்னைக்கு வருவது பிள்ளையை வைத்துக் கொள்ளவா? அல்லது படிக்கவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/76&oldid=1021628" இலிருந்து மீள்விக்கப்பட்டது