பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

பொன், வைரம், நிலக்கரி ஆகிய சுரங்கங்கள் நிறைந்த பூமி தென் ஆப்பிரிக்கா.

உலகம் எங்கும் ஆக்கிரமித்து, பலப்பல நாடுகளின் செல்வங்களையும் சுரண்டி, தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்வதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்த வெள்ளையர்கள் தென் ஆப்பிரிக்காவையும் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும், ஏனைய பிறரும் அந்த நாட்டை ஆக்கிரமித்தனர். ஆங்கிலப் பேரரசின் பங்கே இதில் அதிகமிருந்தது.

தென் ஆப்பிரிக்கா கறுப்பின மக்கள் வாழும் நாடு. கள்ளங்கபடற்ற உள்ளத்தையும் எளிமையான வாழ்க்கை முறைகளையும் கொண்டிருந்தார்கள் கறுநிற மனிதர்கள். இவர்களே அந்நாட்டில் 80 சதவிகிதம் பூர்வீகக் குடிகளாக வசித்து வந்தார்கள்.

வன்முறையாக அம் மண்ணை ஆக்கிரமித்து வெள்ளையர்கள் - முக்கியமாக ஆங்கிலேயர் - நாட்டின் பழங்குடி மக்களை அடிமைப்படுத்தி, அவர்களது நிலங்களைப் பறித்தனர். சுரங்க முதலாளிகள் ஆயினர். கறுப்பர்கள் கூலிகளாக்கப்பட்டார்கள். சொந்த மண்ணில் கறுப்பின மக்கள் அடிமைகளாகி, பல விதமான கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


வல்லிக்கண்ணன் • 9