பக்கம்:நெற்றிக்கண்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நெற்றிக் கண்

1. முதல்நாள் நிகழ்ச்சியின் விளைவாகவே வந்ததுபோல் நாசு: சாமியின் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. அதில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் விளம்பர இலாகா வைச் சேர்ந்தவர்களோடு மரியாதையோடும் கண்ணியத். தோடும் ஒத்துழைத்து காரியாலயத்தின் விளம்பர வருவாய் பெருகுவதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், விளம்பர

இலாகாவோடு ஒத்துழைக்க மறுத்து முரண்படுகிறவர்கள்

மேல் நடவடிக்கை எடுக்கக் காரியாலயத்தாருக்கு உரிமை

உண்டென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினோரு மணிக்கு ரங்கபாஷ்யம் சுகுணனுடைய அறையில் வந்து சமரசம் செய்து கொள்வது போல் பேசிவிட்டுப் போயிருந்தாரென்

றால் பதினொன்றடித்த பத்தாவது நிமிஷத்தில் ரங்கபாஷ். யத்திற்குச் சிறிதும் இதில் சம்பந்தமே இல்லாதது போல் நாகசாமியிடமிருந்து இந்த அறிக்கை வந்திருந்தது. இந்த அறிக்கையைத் தயார் செய்து அனுப்பும்படி நாகசாமியிடம்

யோசனை கூறித் தூண்டி எல்லாம் செய்துவிட்டுத் தனக்கு இதில் சம்பந்தமே இல்லாதது போலவும் தான் யாரையுமே

பகைத்துக் கொள்ள விரும்பாத-பயந்த சுபாவமுள்ள

அப்பாவி போலவும் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப்போன

ரங்கபாஷ்யத்தின் முகத்தை மறுபடியும் நினைவு கூர முயன் றான் அவன். அப்படி முயன்றபோது அந்த முகத்தில் பசுத் தோல் விலகி ஓர் ஒரமாகப் புலியின் கொடுமை இலேசாகத் தெரிந்தது. . . . . . . . . . . . . . . . . .

'மனிதர்களின் ஒரே திறமை சாகஸம்தான் என்ற: உண்மை பட்டினத்துக்கு எவ்வளவு பொருத்தமான மதிப் பீடு!" என்றெண்ணினான் அவன். தைரியம், புத்தி, நேர்மை, சத்தியம் எல்லாம் மனித குணங்கள் என்ற நிலைமை மாறிப் போய் என்ன குணம் என்று சொல்ல முடியாத-நல்லதா

கெட்டதா என்று உறைத்துப் பார்த்து மாற்றுக் கண்டு '

பிடிக்க முடியாத சாகஸ்ம்தான் நாகரிக மனிதனின் பொதுக் குணமாயிருப்பதாக உணர முடிந்தது. இந்தச் சாகஸமே இப்படிப்பட்ட நகரங்களில் மனிதனின் ஒப்புயர்வற்ற திற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/150&oldid=590524" இலிருந்து மீள்விக்கப்பட்டது