பக்கம்:நெற்றிக்கண்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நெற்றிக் கண்.

மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவன் மற்றவர் களுக்கு அடங்கியோ கட்டுப்பட்டோ நடப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை இந்த அனுபவங்களால் சுகுணன் நன்றாக உணர முடிந்தது. சுகுணனை ரூஃப் கார்டன் விருந்துக்கு அழைக்க வந்திருந்த தினத்துக்கு ஒரு வாரம் கழித்துத் துளசி தன் கணவனோடு திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போகவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது. சந்திரசூடன் ஐ. சி. எஸ். அவர்களின் சிபாரிசினாலோ அல்லது தயவினாலோ துளசியின் கணவ னுக்கு டில்லியில் ஒரு பெரிய இன்ஜீனியரிங் கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் மாதச் சம்பளம் வருகிறாப் போல உத்தியோகம் ஒன்று கிடைத்திருந்தது. இந்த உத்தியோகம் கிடைப்பதற்காகத்தான் நீண்டநாள் நண்ப ரான சந்திரசூடன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து தற். செயலாகச் சென்னை வந்திருந்தபோது அவரைக்கூப்பிட்டுக் குலாவி விருந்து கொடுத்து அவருடைய வெளிநாட்டு அதுபவங்களைக் கட்டுரைத் தொடராக வெளியிடுவதாய்

வாக்களித்து, எல்லாம் செய்திருந்தார் நாகசாமி. ஏழைகளும் மத்தியதரக் குடும்பத்தினரும் பிரதிபலன் ப ா ரா மல் அன்புக்காகவும். உபசாரத்துக்காகவும்

மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள், பணக்காரர்களும், வியாபாரிகளுமோ, காரியமில்லாமல் எதையுமே செய்வதில்லை. காரியத்தைச் சாதித்துக் கொடுக்கிற சக்தியில்லாதவர்களுக்கும் எதை யுமே..அவர்கள் செய்வதில்லை. செய்வதை நேரடியாகச் செய்யாமல் நாசூக்காகச் செய்வதற்கும் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதைச் சுகுணன் மிக அருகிலிருந்து கண்டிருந் தான். எனவே நாகசாமி. நினைத்த கணத்திலேயே தன் மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய உத்தியோகம் தேட முடிந்ததைப் பற்றிச் சுகுணன் சிறிதும் ஆச்சரியமடைய வில்லை. அவரால் இது முடியாமல் போயிருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/152&oldid=590527" இலிருந்து மீள்விக்கப்பட்டது