பக்கம்:நெற்றிக்கண்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 及司5

புரிந்து கொள்ளவும் வேண்டாமென்பது தான் அவன் கருத்து. முதலில் தனியே அவனைச் சந்திக்க வந்த இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடியும் தன் கணவனோடு ஒருமுறை விடைபெற வந்திருந்தாள் துளசி. இப்போது கணவனை விட்டுக் கொடுக்காமல் உடன் வந்தவள் போலத் தோன்றி னாள் அவள். .

'முதலில் இப்போது நான் மட்டும் தான் புறப்பட்டுப் போவதாயிருந்தது. அப்புறம் மாமா யாரோ தெரிந்தவர் மூலம் குடியிருக்க இடத்துக்குக்கூட ஏற்பாடு செய்து விட்டார். அதனால் துளசியும் இப்போது என்னுடனேயே வருகிறாள்.’’ என்றான் துளசியின் கணவன். துளசி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பொம்மை போல உடன் வந்திருந்தாள். -

'கங்ராஜூலேஷன்ஸ் விஷ்யூ ஆல்...சக்ஸஸ்' என்று துளசியின் கணவனிடம் ஒரு முறைக்காக மகிழ்ச்சி தெரிவித் தான் சுகுணன். துளசி ஒன்றுமே பேசாமலிருப்பதைக்

கண்ட அவள் கணவன், என்ன துளசி? நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே?’ என்று அவளைக் கேட்டே விட்டான். -

அந்த வித்தியாசம் அவன் மனத்திலே பெரிதாகி விடாமல் ஒப்புக்கு ஏதோ பேச முயன்றாள் துளசி. அந்தப் பேச்சில் மண்ம் இல்லை. உணர்வின் பிரதிபலிப்பும் இல்லை. விடைபெறும்போது கணவனின் சொற்களோடு சேர்த்தே அவள் சொற்களும் இணைந்து ஒலிக்கும்படி ஏதோ சொன் னாள். அவனும் வாசல் வரை சென்று கார்க் கதவருகே நின்று வழியனுப்பினான். மறுநாளோ அதற்கடுத்த நாளோ இரவு விமானத்தில் கணவனோடு டெல்லிக்குப் புறப்பட்டு விட்டாள் துளசி. நாட்கள் யாரோ மந்திரம் rேiாட்டு ஒடச் சொன்னாற் போல ஒடிவிட்டன. பெண்ை னேயும் மாப்பிள்ளையையும் டெல்லியில் குடிவைப்பதற்காக உடன் சென்றிருந்த நாகசாமி சந்திரகுடன் ஐ. சி. எஸ். அவர் களின் பிரயாணக் கட்டுரைத் தொடரை உடனே பிரசுரிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/157&oldid=590532" இலிருந்து மீள்விக்கப்பட்டது