பக்கம்:நெற்றிக்கண்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 71

உங்களுக்குத்தான் தெரியுமே, நம்ப நாகசாமி ஐயாவுக்குப் "பெங்களுர் ரெப்ரஸன்டிவ்’னு ஒருத்தன் இருக்கானே! நாங்க இங்கிருந்து கார்லே, திருப்பதிக்குப் புறப்படற இதே சமயத்திலே அந்தப் பெங்களுர ஆளும் அங்கிருந்து ரெண்டு காரிலே திருப்பதிக்குப் புறப்படுவான். ஒரு கார்லே இவங்களுக்கு வேண்டிய பாட்டில்கள் லாம் இருக்கும். இன்னொரு கார்லே...யாரு இருப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சிக்கலாமுங்க. யாரோ ஒமர் கயாம்’னு ஒரு கவி பாடியிருக்கானுங்களாமுல்ல. மதுவும் மங்கையும்’னு அந்தக் கதை தான்! புனித rேத்திரத்தின் புனிதம் கூட இப்பிடி ஆளுங்க போறதுனாலே குட்டிச்சுவராப் போயிடு முங்க. இவங்க போற இடம் திருப்பதியாயிருக்கிறதுனாலே இப்படியெல்லாங்கூட நடக்குமுன்னு யாருமே நினைக்க முடியாதுங்க. அட! இதுதான் போகட்டுங்க. டெல்லிலே ருக்காரே மெட்டல் அண்ட் அயர்ன் கம்பெனி அட்வர்டிஸ் மெண்ட் மானேஜர் குப்புசாமி-அந்தப் குப்புசாமியோட மைத்துனி பிரசவத்துக்காக இங்கே மெட்ராஸ் வரான்னாஉடனே ஏர்-போர்ட்டுக்கோ- சென்டிரல் ஸ்டேஷ னுக்கோ-நாகசாமி கார் அனுப்புறாரு, மத்தவங்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்து இவங்க வசதியை அடையுறாங் கங்கறதுதான் சரிங்க...'-என்று அந்தக் கார் டிரைவர் ஒருமுறை சுகுணனிடம் மனம் திறந்து பேசியபோது கூறியிருந்தான். நாகசாமி, சர்மா, ரங்கபாஷ்யம் ஆகியவர் களைப்பற்றி நினைத்தபோது இந்த வேளையிலும் அந்த ஞாபகங்களெல்லாம் அவன் மனத்தில் எழுந்தன.

சுகுணனின் மனத்தோடு இரண்டறக் கலந்து உறைந்து போயிருந்த தன்மானத்துக்கும் சுய மரியாதைகக்கும், காரணம் காலஞ்சென்ற அவன் தந்தை அவனை வளர்த் திருந்த சூழ்நிலைதான். அவனுக்கு ஆறு வயதும், சகோதரிக்கு இரண்டு வயதும் நடந்து கொண்டிருந்தபோது அதிகம் நினைவு தெரியாத பருவத்திலேயே தாயை இழந்து பின் தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/173&oldid=590549" இலிருந்து மீள்விக்கப்பட்டது