பக்கம்:நெற்றிக்கண்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197

காக டாக்ஸியில் வருவானேன்? வீட்டிற்குப் போய் விட்டே வந்திருக்கலாமே?'- என்று சுகுணன் கூறியதை அவள் இரசிக்கவில்லை.

"ஏன் இப்படிப் பேசமாட்டீர்கள்? நீங்கள் செய்த அநியாயத்தை ஃபோர்மென் நாயுடு எனக்கு எழுதின கடிதத்தில் தெரிவித்திருந்தார். எப்படித் துணிந்தீர்கள் இதைச் செய்வதற்கு?'

"எதைச் செய்வதற்கு?’’

"ஏன் ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறீர்களோ தெரியவில்லை? இராஜிநாமா செய்து விட்டு வெளியேறும் படி இப்போது என்ன நடந்து விட்டது?"

எவ்வளவோ நடந்திருக்கிறது. உனக்கு ஒன்றும் தெரியாது. அதனால்தான் நீ இப்படிக் கேட்கிறாய்! ஒருவனை வெளியே போய்விடு'-என்று சொல்லி நேரடி யாக அனுப்புவதைவிட அதிக அவமானப்படுத்துவது, வெளியே போவதற்கான காரியங்களை மறைமுகமாக ஏற்பாடு செய்வதுதான். கால் நூற்றாண்டு காலமாக இப்படி ஆட்களை வெளியே அனுப்புவதற்கான குழ்நிலையை உருவாக்குவதைக் கற்றுப் பழகியவர்கள் உன் தந்தையும் ரங்கபாஷ்யமும். உன்னுடைய ஆசையும் ஆர்வமும் இதை ஒன்றும் செய்துவிட முடியாது. என்மேலி, ருக்கிற பிரியத்தையும் - அன்பையும் - அதுதாபத்தையும் இந்தச் சமயத்தில் நீ வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்வதுகூட உனக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும். நீ யார் மேல் அன்பு வைத்திருக்கிறாயோ அவர் மற்றவர் களிடம் மறைமுகமாக அவமானப்படுவதைக்கூட நீ விரும்ப மாட்டாய் என்று நான் உன்னை நம்பலாமல்லவா?

துளசி இதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை, வெளியே நின்றிருந்த லாட்ஜ் பையனிடம் காபி வாங்கி வருமாறு குறிப்புக் காட்டினான் சுகுணன். -

நெ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/199&oldid=590576" இலிருந்து மீள்விக்கப்பட்டது