பக்கம்:நெற்றிக்கண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நெற்றிக் கண்

அந்த அதிகாலையில் அந்தக் கிராம அந்தரத்து அமைதி பில் நானும் இருக்கிறேன்' என்பது போல் டி. பி. வாசலி லிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் இரண்டு முறை கூவியது. எதிரே மரங்கள் அணிவகுத்த சாலையில் விகார மான ஓசையோடு கடமுடவென்று ஒரு கட்டைவண்டி, மெதுவாக அவசரமின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதை அடுத்து மூச்சு இரைக்க நெற்கதிர் அறுத்த கட்டுடன் இரவிக்கை அணியாத நாட்டுப்புற பெண் ஒருத்தி தலைச் சுமையோடு களத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். எங்கோ இறவைக் கிணற்றில் கவலை இறைக்கும் ஓசை துரத்து ரேடியோ அஞ்சலைப் போல் கேட்டுக் கொண் டிருந்தது. சுகுணன் எழுந்து நின்று.சோம்பல் முறித்தான். வழக்கம்போல் மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி யில் இடித்துவிடும் அளவிற்குக் கைகள் உயரப்போயின. சாதாரணமான உயரமுள்ள மனிதர்களை மாதிரியாக வைத்துத்தான் இந்த டி. பி. கட்டிடமெல்லாம் கட்டியிருப் பார்கள் போலிருக்கிறது. -

பாத்ரூமில் தண்ணிர் நிரப்பியாகி விட்டதென்கிற செய்தியை டி. பி, வாட்ச்மேன் வந்து தெரிவித்து விட்டுப் போனான். அதோடு இன்னொரு செய்தியையும் அவன் சிரத்தையோடு தெரிவித்தான். -

சாயங்காலம் தாசில்தார் காம்ப் வாராரு. அதற் குள்ளாற...இடத்தைக் காலி பண்ணிட்டா நல்லதுங்க""கட்டாயம் காலி பண்ணி விடுவேன். நீ கவலைப் படாதே. எனக்கு மூன்றரை மணிக்கு இரயில்'-என்றான் சுகுணன. -

  • எக்ஸ்பிரஸ் ரெண்டு விநாடிகள்தான் இங்கே நிற்கும். மூணரைக்கு ரயிலுண்ணா மூணு மணிக்கே ரயில்டேச னுக்குப் போயிடனுங்க...'-என்று கிராமத்துக்கே உரிய அதிக சிரத்தையோடு பதில் வந்தது வாட்ச்மேனிட் மிருந்து. • * -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/20&oldid=590386" இலிருந்து மீள்விக்கப்பட்டது