பக்கம்:நெற்றிக்கண்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I 6 நெற்றிக் கண்

'வா! அண்ணா! இப்போதுதான் என்னைத் தேடி வர வழி தெரிந்ததா? என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை செளக்கியமா பவானி?' என்று. அன்புடனே விசாரித்தான் சுகுணன்.

"ஹெட்கிளார்க் வீட்டு மாடியில் நீ தங்கிக் கொள்ள இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். வா! நானும் கூட வரு கிறேன். காரிலேயே போய் விடலாம்' என்று அவனோடு பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பவானி, நீண்ட நாள் அவளைப் பார்க்காமல் இருந்து விட்டுத் திடீரென்று இப்போது பார்க்கிற வேளையில் பொலிவாகவும் வனப்பாக, வும், அவள் வளர்ந்திருப்பது போல் தோன்றியது சுகுண் னுக்கு. படிக்கிற பெண்கள் அவளிடம் வைத்திருக்கும். அன்பையும், பிரியத்தையும் காணப் பெருமையாயிருந்தது. அவனுக்கு. அந்த ஊருக்கு திருவிழா வந்து வட்டதைப் போல் அவன் வரவைக் கொண்டாடினாள் தங்கை. படிக்கிற, பெண்களிடமும், சக ஆசிரியைகளிடமும், அவளுக்கு இருக் கும் செல்வாக்கைப் பார்த்து வியந்தான் சுகுணன்.

'உங்களைப் போல் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம். தங்குவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’’ என்று ஹெட்கிளார்க் மிகவும் விநயமாகத் தன் வீட்டிற்குள் அவனை வரவேற்றார். எதிர்ச்சாரியிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும் ஒரு கொத்து முகங்கள் எட்டிப் பார்க்க வாடகைக் காருக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுச் சுகுணன் ஹெட்கிளார்க் வீட்டிற்குள் நுழைந்தான். ஹெட்கிளார்க் வீட்டில் அவருடைய மூன்றாவது மகள் என்று சொல்லிப் பவானி அறிமுகப்படுத்தி வைத்த யுவதி அவனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டு-அவ னுடைய நாவல்களையும், தொடர் கதைகளையும் ஒவ் வொன்றாகப் பெயர் சொல்லி அவற்றைத் தான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருப்பதாகச் சொன்னாள்.

"அப்படியா நிரம்ப மகிழ்ச்சி- என்று அவளுக்கு. மறுமொழி கூறிய சுகுணனை இடை மறித்து "இவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/218&oldid=590595" இலிருந்து மீள்விக்கப்பட்டது