பக்கம்:நெற்றிக்கண்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 21 6

எண்ணம் சுகுணனுக்கு அடிக்கடி வருவதுண்டு. பாரதத்தின் இருண்ட கிராமங்களையும், எழுத்தறிவில்லாத மக்களை யும் மனத்திற்கொண்டு காந்தியடிகள் போராடிய சுதந்திரப் போர் நகரங்களை மட்டுமே வளர்க்கும் ஒருதலைப் பட்ச மான வெற்றியாகப் போய் விட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுள் அடிக்கடி எழுந்ததுண்டு. அண்ணுளரில் கோவை கயின் வளர்ச்சி தென்படவில்லையாயினும்,

அருகிலிருக்கும் ஒரு சூழ்நிலை தென்பட்டது. சாலையின் இருபுறமும் செழிப்பான பருத்திச் செடிகளில் வெளே ரென்று பருத்தி பூத்திருந்தது. இடையிடையே கரும்புத் தோட்டங்கள் பசுந்தோகைகளைச் சிலிர்த்துக் கொண்டு

செழுமையாகத் தோன்றின. விடுதிப் பொறு கொண்டு அவள் அங்கேயே தங்கி வசி சகோதரியோடு தானும் தங்க முடியாது என்பதைச் சுகுணன் நினைவு கூர்ந்தான். வாடகைக் கார் பள்ளிக்கூட விடுதிக்குள் நுழைந்தபோது எதிரே தென்பட்ட ஒவ்வொரு வரும் தன்னையும், காரையும் வியப்புடன் ஏறிட்டுப் பார்ப்பதை சுகுணன் உணர முடிந்தது. கார் விடுதி, முகப்பில் நின்றதும் வராந்தாவில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த நாலைந்து பெண்கள் பரபரப்பாகப் படி யேறி மேலே மாடிக்குப் போய்ச் சுகுணனின் சகோதரியை அழைத்து வந்தனர். தனிமையில் சவித்துச் சவித்துத் தன் வரவைப்பற்றி கற்பனையும் ஆவலும் காண்பித்த தங்கை தன்னிடம் படிக்கிற பெண்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ள தொடங்கியிருக்க வேண்டுமென்று அவனால் அதுமானம் செய்து கொள்ள முடிந்தது. ஆவல், வியப்பு, ஆகிய உணர்வுகளில் எல்லாம் மரத்துப்போயிருந்த பட்டினத்து மனிதர்களிடையே இருந்து விட்டு, எதிலும் ஆவலும், வியப்பும் நிறைந்த சிற்றுார் மனிதர்களைச் சூழ்வது திடீரென்று ஏதோ ஒரு விதமான விடுதலையும் சுதந்திரமும், கிடைத்து விட்டதைப்போல் மகிழச் செய்தன. அந்த மகிழ்ச்சியில் இனம் புரியாததொரு குறுகுறுப்பும் இருந்தது. : *

வளர்ச்சிக்கு

ப்பை ஏற்றுக் த்து வந்ததால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/217&oldid=590594" இலிருந்து மீள்விக்கப்பட்டது