பக்கம்:நெற்றிக்கண்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நெற்றிக் கண்

'இப்போது அதற்கென்ன அவசரம்? தங்கைக்குத்தான் முதலில் வரன் பார்க்க நினைத்திருக்கிறேன், எனக்கு இப்போது சாத்தியமில்லை. ஜர்னலிசத்தில், ஒரு பெரிய "டிப்ளமா வாங்குவதற்காக அமெரிக்காவோ, ஐரோப் பாவோ, போக எண்ணமிருக்கிறது. போனால் திரும்ப நாளாகும். அப்புறம்தான் இதைப் பற்றிச் சிந்திக்க முடியும்...'-என்று ஒரே போடாக போட்டான் சுகுணன். சாயங்காலம் அவன் கோவைக்கு வந்து நீலகிரி எக்ஸ்பிரளில் -சென்னை புறப்பட்டபோது பவானிக்கு அழுகையே வந்து விட்டது. ஏதோ மூன்றாம் மனிதர்கள் சந்தித்துக்கொள் வதுபோல் எப்போதாவது சந்தித்துக் கொள்கிறோம். மறுபடி எப்போது பார்ப்போம் என்று உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது..." -

- "அப்படிச் சந்திக்கிற சந்திப்பில்தான் உறவு, பாசம் எல்லாம் அதிகமாகச் சிலிர்த்தெழுகிறது. பவானி! சிறு குழந்தைபோல் அழாதே...எல்லாரும் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்! இது பொது இடம்! கடிதம் எழுதினால் ஆறை விலாசத்துக்கு எழுது. மறந்து போய் இனியும் էէմ: பொழிலுக்கு" எழுதாதே."-என்று தங்கைக்கு ஆறுதல் கூறி விடைபெற்றபோது சுகுணனும் மனம் நெகிழ்ந்துதான் போயிருந்தான். மனிதர்களின் பலவீனம் அவர்கள் ஒருவருக் கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதில்தான் இருக்கிறதென்று தோன்றியது. தங்கையின் அந்த அழகியமுகம்-உயரமான வாளிப்பான தோற்றம்,-கோவை நிலையத்தின் மேடையில் மங்கி மறைந்தபோது உணர்வு அவன் மனத்தைப் பிசைந் தது. உள்ளே ஒரு சோகம் வந்து கவிந்து விலகியது.

"போன்தும் ஞாபகமாகக் கடிதம் எழுதுங்கள்"-ஒரு வேண்டுகோள். சுவாமி எவிடைக்கா போகுந்தது?-என்று யாரோ மலையாளத்தில் யாரையோ விசாரிக்கும் ஒரு. குழைவான குரல்-அர்த்தமில்லாமல் இரயிலோடு கலந்து ஒசையில் சங்கமமான சில குரல்கள்-சில வார்த்தைகள்காதில் விழுந்தன. வண்டி விரைந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/222&oldid=590599" இலிருந்து மீள்விக்கப்பட்டது