பக்கம்:நெற்றிக்கண்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நெற்றிக் கண்

போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது. மகாதேவன் இரண்டாவது விதமான மரணத்தையே அடைந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவ ருடைய இயக்கம் அழிந்து போவதைச் சுதந்திரச் சிந்தனை யுள்ள எந்தத் தமிழ்ப் பத்திரிகையாளனும் விரும்ப மாட்டான் என்று சுகுணன் அறிவான். வாடகைக் காரில் நேரே மகாதேவன் வீட்டிற்கு விரைந்தான் அவன். போகிற வழியில் மனத்தில் ஏதோ தோன்றவே ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் அருகில் காரை நிறுத்தி அன்றைய காளை நேஷனல் டைம்ஸ்’- வெளிவந்திருக்கிறதா இல்லையா என்று விசாரிப்பதற்காக இறங்கினான். நல்ல. வேளையாக அவன் பயந்ததுபோல் வராமலில்லை. கடை முன்பு டைம்ஸின் வால்போஸ்டர்கள் தொங்கின, பத்திரிகையும் வந்திருந்தது. ஆனால் தலையங்கமோ செய்திகளோ அதிகம் இல்லை. மகாதேவனின் அருங் குணங்களைப் பாராட்டும் இரங்கற் கட்டுரைகளும், பிரமுகர்களின் அனுதாபக் கடிதங்களும், புகைப்படங்களு மாக எட்டுப் பக்கம் மட்டும் அடித்து வெளியிடப்பட்டி இருந்தது. முதல் நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் தி டி .ெ ர ன் று மாரடைப்பால் காலமாகியிருக்கிறார். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை அவர் இருந்து கவனித் திருந்தும் மறுநாள் இதழ் நாலு பக்கம்தான் வெளிவர முடிகிறதென்றால் இனிமேல் நாளை qp&5@ uumtif கவனிப்பில் பத்திரிகை எப்படி வெளிவரும் என்ற கேள்வி

பெரிதாக எழுந்தது அவன் மனத்தில்.

"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் இத்துப் பத்திரிகை இல்லாமல் போய்விடக்கூடாது. என்று மகாதேவன் வாய்க்கு வாய் உறுதி கூறும் சொற்கள் நினைவு வந்து சுகுணனைக் கண் கலங்கக் செய்தன. பத்திரிகையை விலைக்கு வாங்கி அவன் கடைவாயிலிலேயே பிரித்துப் பார்த்த போது-வியாபாரத்துக்கும் அதிகமான கரு.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/232&oldid=590609" இலிருந்து மீள்விக்கப்பட்டது