பக்கம்:நெற்றிக்கண்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நெற்றிக் கண்

யாரோ படியேறி நடந்துவரும் காலடியோசை கேட்டது. தொலைவிலிருந்து நெருங்கிவரும் அநுராகத். தின் மெல்லிய சங்கீதம்போல் மெட்டி ஒலி தாளமிட தடந்துவரும் மங்கலமான திருமகளின் காலடி ஒசையா அது? தரித்திரமும் தளர்ச்சியும், துயரமும் தற்காலிகத் தோல்விகளும், நிறைந்துவிட்ட டைம்ஸ் காரியாலயத் திற்குள் எங்கிருந்து வருகிறது. இந்த இலட்சுமீகரமான இங்கித நாதம் இந்த நாதத்தைத் தொடர்ந்து கொல் லென்று சுற்றிலும் மல்லிகை பூத்துக் குலுங்குவதுபோல் நறுமணமும் விரைந்து வந்தது. ஒசையும் வாசனையும் நெருங்கின. காதில் கேட்பதும், கருத்தில் உணர்வதும், உண்மையா சொப்பன்மா என்ற தயக்கத்தோடும் இந்த உலகம் என்ற பிடிவாதமான புறக்கணிப்பாகிய நெற்றிக் கண்ணின் வெப்பத்தில் வாடிய வாட்டத்தின் சோர் வோடும் மெல்லக் கண்களைத் திறந்து எதிரே பார்த்தான் சுகுணன். -: . . சித்திரம்போல் எதிரே நின்று கண்களில் நீர் அரும்பம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் துளசி. எதிரே அவன் பார்வையில் பாதாதிகேசபரியந்தம் அவள் தென்பட்டபோது-தரையில் பதித்த தாமரைகளைப்போல் தெரிந்த அவள் பாதங்களில் இந்தக் கால்கள் இன்னும் உங்க்ளருகில் நெருங்கி வந்து நிற்க முடியாமல் பெரியோர் கள் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நிச்சயித்து இப்படித். தடையும் போட்டு விட்டார்கள்-என்பது போல் அப்படிப்போட்ட அழகிய தடைகளாக மெட்டிகள் வெளேரென்று மின்னிக் கொண்டிருந்தன. பவழமாய்ச்' சாயமிட்டிருந்த அளவான அழகான நகங்களோடு தயங்கிய அந்தப் பாதங்களில் அவன் பார்வை நிலைத்தது. அவள் முகத்தைத் தொடர்ந்து ஏறிட்டுப் பார்க்க அவனால் முடிய வில்லை. மனமும் இல்லை. -

இதெல்லாம் என்ன? உடம்பு சரியில்லை என்றால் அதை அறிந்து கொள்ளக் கூடத் தகுதியில்லாத பாவியாகி விட்டேனா நான்?’’ - , ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/250&oldid=590627" இலிருந்து மீள்விக்கப்பட்டது