பக்கம்:நெற்றிக்கண்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நெற்றிக் கண்

கடுமையான சொற்களைக் கூறியிருந்தாலும் எனக்குள் அந்தரங்கமாக உன்னை நினைத்து நினைத்துக் கருணை மய மாக நெகிழ்ந்திருக்கிறது என் உள்ளம். இன்னொருத்தியின் உள்ளத்தில் நாம் தவிப்பாகவோ-ஏக்கமாகவோ நிரம்பி விருக்கிறோம் என்ற ஞாபகமே ஒரு தவிப்பாக எரித்திருக் கிறது என்னுள். அதை உன்னால் புரிந்துகொள்ள முடிந் ததோ இல்லையோ எனக்குத் தெரியாது."

"புரியாமலென்ன? வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சில் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத்துணைகளால், பயனில்லை'-என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் குத்திக் காட்டியிருக்கிறீர்கள். அதை உங்களைவிட நன்றாக நான் உணர்ந்திருந்த காரணத்தால்தான் இப்போது கைகளாலும் உதவி செய்து சாட்சியாக நிற்பதற்கு வந்தேன். டைம்ஸ்’ நடந்தால்தான் உங்களுடைய பெருமை காப்பாற்றப்படும் என்பதில் உங்களைவிட எனக்குக் கவலை அதிகம்...' --

"குயிலைப்போல், கிளியைப்போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப்போல் பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள்தான் உண்டு என்று முன்பு நான் நினைத் திருந்தேன். 'விடாமல் நம்மைத் துரத்தும் இந்தக் காதல் பறவையின் மெல்லிய சிறகுகள் வலிக்குமே?-என்று கூடச் சில சமயங்களில் அந்தரங்கமாக உன்னை நினைத்து நான் பச்சாதாபப்பட்டிருக்கிறேன். ஆனால் உன்னுடைய அன்பின் சிறகுகள் மெல்லியவையாயினும் வல்லவைகளா உயிருப்பதை-எவ்வளவு தூரம் வேண்டுமாயினும் துணைப் பறவைய்ைத்துரத்திப் பறந்துவர முடிகிற அளவு வல்லவுை களாயிருப்பதை இன்று உன் செயல்களிலும், சொற்களிலு. శ్రీ நான் நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது துள * * , ‘. --

s é p >

  • . . . சிறிது நேர் மெளனத்துக்குப்பின் துளசி அவனிடம் சிறு குழந்தைபோல் ஓர் அல்பு ஆசையைத் த்ெரிவித்தாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/260&oldid=590638" இலிருந்து மீள்விக்கப்பட்டது