பக்கம்:நெற்றிக்கண்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நெற்றிக் கண்

அந்த அதிகாலையில் எழும்பூர் நிலையத்தின் படிகளுக் குக் கீழே எந்தவிதமான மாறுதலோ, சிறப்போ விளைந்து விடாமல் சென்னை வழக்கம் போல்தானிருந்தது. தண்ணிர் அலை அலையாக ஒடுவதற்குப் பதில் நிறைய மனிதர்களும் டிரான்ஸ்போர்ட் பஸ்களும், வாடகைக்கார்களும், சைக்கிள் களும், ரிக்ஷாக்களும் நிதானமாக ஓடுகிற ஒரு மகாநதியைக் கற்பனை செய்தாற்போல் இந்தச் சென்னை நகரத்து விதி: களைத் தனக்குள் பலமுறை கற்பனை செய்திருக்கிறான் அவன். கிழிந்த டயர்களும் தோல் துண்டுகளுமாகத் தான் இருக்குமிடத்தை அறிவிப்பதற்குத் தம்மளவில் 'தரைமேல் உண்டாக்கிய ஒரு சிக்கனமான ஷோரும் போல் நாலைந்து செருப்புக்களைக் கொலு வைத்துவிட்டுக் காத்திருக்கும் செருப்புத் தொழிலாளிகளும், ஆப்பிளுக்கு துணியால் துடைத்துப் பாலிஷ் போடும் ஆப்பிள் பழக்கடைக்காரரும், யாரோ ஒரு முக்கியமான தலைவர் கைதாகிவிட்ட செய்தி: யோடு இருக்கும் தினசரி வால்போஸ்டர்களை வரிசையாகத், தொங்கவிட்டிருக்கும் பத்திரிகை ஸ்டால்களுமாக எழும்பூர் நிலையத்தின் எதிர்ப்புறம் திரும்பத் திரும்ப ஒரே விதமாக அச்சடித்த ஒரு புத்தகத்தின் பக்கம் போலிருந்தது.

காட்டப்படும் வேகத்தினாலும், பரபரப்பினாலும். மனிதர்கள் நுழைந்து வெளிவரும் இராட்சதச் சுறுசுறுப்பி னாலும் மீல்ஸ்ஃபேக்டரி அல்லது டி.பன்ஃபேக்டரி என்று சொல்லத்தக்க இரண்டொரு கலகலப்பான ஓட்டல்களும் எதிரே வழக்கம்போல் தானிருந்தன. எதிர்ப்புறத்தை ஓரிரு விநாடி நிதானம்ாகப் பார்த்துவிட்டு பணத்தில் வேண்டிய தும் வேண்டாததுமான சிந்தனைகளோடு டாக்ஸியையோ. ஆட்டோ ரிக்ஷாவையேர் எதிர்நோக்கி நின்ற சுகுணன் எதிர்பாராத சந்திப்பு ஒன்றிற்கு ஆளானான். "துளசி'யின் வீட்டு டிரைவர் எதற்காகவோ அந்த வேளையில் அங்கு எழும்பூருக்கு வந்திருந்தான். கார் பார்க்கிங்கில் பார்த்த: போது எத்தனை கார்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்தா இலும் தனியே அடையாளம் தெரியக்கூடிய அந்த மூக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/28&oldid=590394" இலிருந்து மீள்விக்கப்பட்டது