பக்கம்:நெற்றிக்கண்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நெற்றிக் கண்

அப்படிச் செய்தால் அதன் விளைவு உங்களைப் பாதிக்கும். நீங்கள் ஏதோ என்னைச் சொக்குப் பொடி போட்டு மயக்கி என் குழந்தை மனத்தைக் கெடுத்து விட்ட்தாக மற்றவர் கள் அப்பாவிடம் கோள் மூட்டுவார்கள். உங்கள் மேல் அநாவசியமாக அப்பாவுக்கு ஆத்திரம் வரும்.

இரண்டு தினசரிகளையும் ஒரு வாரப் பத்திரிகையையும் ஒரு மாதப் பத்திரிகையையும் உட்கொண்டு விளங்கும் இந்தப் பெரிய பத்திரிகை நிறுவனத்தில் உங்கள் மேல் பகைமையும் பொறாமையும் உள்ளவர்கள் நிறைய இருக் கிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்லவே? வெகுண் டெழுந்து குமுறி இதை மறுப்பதற்குச் சந்தர்ப்பமும் உரிமையும் இருந்தும் கூட நிதானமாகச் சிந்தித்த பின் உங்களுக்காகவே நான் ஊமையானேன்.

என்னுடைய இழப்பை நான் உணர்கிறேன். அதே சம பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையாயிருக்க வேண்டியவ ளென்ற முறையில் உங்கள் எதிர்கால நலனையும் நான் காக்க வேண்டியவளாயிருக்கிறேன். இந்தத் தாபம்-என் நெஞ்சின் சதையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு வருகிறாற் போன்ற இந்த விம்மல் வீண்போகாது. இன்னொரு பிறவி யிலாவது நம் நினைவு கைக்கூடும். 'சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குத் தவம். எல்லாராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விடமுடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களுமே அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்’-என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். இனிமேல் இந்தக் கடிதத்தில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. எவ்வளவோ மலைமலையாக எழுத மீதமிருப்பதாகவும் என் மனம் கனத்துப் போயிருக்கிறது. நீங்கள் இந்தக் கலியாணத்திற்கு நிச்சயமாக வரமாட்டீர்கள் என்று என் மனம் சொல்கிறது. அதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள். உலகத்துக்காக எல்லாரையும் போல் நீங்க களும் கலியானத்தன்று தலையைக் காட்டி விட்டுப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/36&oldid=590402" இலிருந்து மீள்விக்கப்பட்டது