பக்கம்:நெற்றிக்கண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 3.5

விடுவது நல்லது. கல்யாணத்தில் உங்களைப் பார்த்தாலும் எனக்கு அழுகை வரும், பார்க்காவிட்டாலும் அழுகை வரும். கடைசியாக ஒரு வேண்டுகோள். அந்தரங்க சுத்தியான இந்த வேண்டுகோளுக்கு வேறெந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ளாதீர்கள். மணக் கோலத்தில் என்னை ஒரு முறை ஒரே ஒரு முறையாவது உங்கள் கண்களால் நிமிர்ந்து தாராளமாகப் பாருங்கள். அந்த ஒரு விநாடி :பிலாவது உங்கள் பார்வையில் நான் மணமகளாவேன். மற்றவர்கள் என்னை வற்புறுத்தி உட்கார வைத்து அப்படி அலங்கரிப்பதற்கு என்னளவில் நான் உள்ளம் குளிர முடியுமானால் நீங்கள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கிற அந்த ஒரு கணத்தில் தான் அது முடியும். யாருக்காகவோ இவள் அலங்கரித்துக் கொண்ட அலங்காரம் தானே?என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நான் என்னை அலங் கரித்துக் கொள்ளவில்லை, திருமணத்துக்காக நான் அலங் கரிக்கப் படுவேன். மணமேடைக்காக நான் தயார் செய்யப் படுவேன். 'திடீரென்று எத்தனையோ பேர் என் னென்னவோ வந்து இந்த உலகை விட்டுப் போய் விடுகிறார் களே; அது மாதிரி இந்த விநாடியில் செத்துத் தொலைந்து போய் விட்டால் எத்தனை நிம்மதியாயிருக்கு மென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இந்த மாதிரி சமயங் களில் நினைத்த போது சாகிற சக்தி மட்டும் மனிதர் களுக்கு இரு ந் து விட்டால்?- என்று எண்ணத் தோன்றுகிறது. -

நமக்குத் தெரிந்தவரை இந்த மாதிரிச் சாவைப் வரப் பிரசாதமாக அடைந்த ஒரே ஒருத்தி சிலப்பதிகாரப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான். அவள் பாக்கியசாலி. பந்தலில் வாழை மரமும் தோரணமும் கட்டுவது போல் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கைகளிலும் கழுத்திலும் தங்கமும், வைரமுமாக நகை கிளைக் கட்டி என்னை அலங்கரிக்கப் போகிறார்கள். உங்க ன்ன்ப் போல் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். காதலில் இழந்தாலும் அழுகை வராது. பரம்பரையாய் ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/37&oldid=590403" இலிருந்து மீள்விக்கப்பட்டது