பக்கம்:நெற்றிக்கண்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நெற்றிக் கண்

சொல்லியபின் நிதானமாகக் கையிலிருந்த தாம்பூலப் பையைப் பார்த்து அதில் எழுதியிருந்த மணமக்களின் பெயரை அப்போதுதான் புதிதாகப் படிப்பது போல், சுகுணன் தனக்குத் தானே ஒரு முறை படித்துக் கொண் டான். தோள்கள் விம்மித் தணிய ஒரு பெருமூச்சு நெஞ்சடி யிலிருந்து எழுந்து சரிந்தது.

டாக்சி காரியாலய வாயிலில் நின்றது: கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு உள்ளே படியேறினால்-சொந்தக் காரைத் தானே ஒட்டிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு அவசர அவசரமாக அவனைப் பின்தொடர்ந்த அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் பிடித்துக் கொண்டார்.

"தி ஒன்லி நோட்பிள் ஆப்லென்ஸ் இஸ் யுவர்ஸ்!"

அதற்கென்ன செய்வது? ஊரில் ரொம்ப முக்கியமான காரியம், தவிர்க்க முடியவில்லை."

காரியாலயத்தில் ஒவ்வொருவரும் அவன் திரும்பி வந் தால் அவனிடம் இதைத்தான் கேட்கவேண்டுமென்று சொல் லிப் பேசி வைத்துக் கொண்டார் போல அதே வாக்கியத்தை அதே ஆங்கிலத்தில் இழுத்தாற்போல் கூறி நிறுத்தி அவன் முகத்தைப் பார்க்கலானார்கள். தேர்ந்த பத்திரிகையாள ரின் சாமர்த்தியத்தோடு சுகுணன் பொறுமையிழக்காமல் ஒவ்வொருவருக்கும் நிதானமாகப் பதில்சொல்லித் தனக்குத் தானே திருப்தியோடு அந்தக் காரியத்தைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. தன்னுடைய அறைக்குப்போய் மின் விசிறியைக் கடிதங்கள் பறந்துவிடாமல் அளவாகப் போட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்தால்-சொல்வி வைத்ததுபோல் ஃபோன் மணி அடித்தது. நாகசாமிதான் பேசினார். * ..., "நீங்க வீட்டுக்கு வந்திருந்தப்பவே கொடுக்கணும்னு நினைச்சேன் மறந்துபோச்சு. குழந்தை. கல்யாண போட்டோ ஒண்னு அனுப்பறேன்! இந்த வார இஷ்யூவி லேயே ரைட் ஹாண்ட் சைடிலே வரமாதிரி முதல் ஃபாரத் திலேயே ஒரு அரைப்பக்கம் நல்ல பார்டராக் கட்டிப் போட்டுடுங்க...' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/40&oldid=590406" இலிருந்து மீள்விக்கப்பட்டது