பக்கம்:பச்சைக்கனவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கனவு 0 8

சற்றுநேரம் பொறுத்து அவன் எண்ணத்தை எதிரொலிப்பது போன்று, அவன் மனைவி கண்ணைப் பலமாய் சிமிட்டிக் கொண்டு,

'வெய்யில் பச்சையாயிருக்கும் வேளைகூட உண்டு...' என்றாள்.

அவனுக்கு உள்ளுர அவாத் துடித்தது, வெய்யில் பச்சையாயிருப்பதில் தன் தலையையே நம்பியிருப்பது போல்.

அவன் மனைவி கண்ணைச் சிமிட்டும் சிமிட்டலில், ரப்பைகள் எகிறிவிடும்போல் துடித்தன.

'பச்சையான பச்சை! இலைப்பச்சை! நேற்று சாயங்காலந்தான் உங்கள் மச்சினன், பதினாலு ரூபாய் போட்டு வாங்கி வந்தான்; இதைப் போட்டுண்டு பாருங்கள்.'

"என்ன இது?’’

போட்டுக்கொள்ளுங்களேன் சொல்றேன்- வெய்யி லுக்குக் குளுகுளுவென்று பச்சைக் கண்ணாடி, எல்லாம் பச்சையாய்த் தெரியறதோ?”

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்பொழுதும் போல் அந்தகாரமாய்த்தானிருந்தது.

'அட! உங்களுக்கு ஜோராயிருக்கே!”

  • "στοί, ούτ7

'மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா?”

அவ்வார்த்தை சுருக்கென்று தைத்தது. உள்ளதைச் சொன்னாலும், எவ்வளவு தூரம் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வீசியெறிந்தான் அது கட்டாந்தரையில் பட்டுத் தெறித்து உடையும் சத்தம் இனிமையாய் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/12&oldid=590667" இலிருந்து மீள்விக்கப்பட்டது