பக்கம்:பச்சைக்கனவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0 லா. ச. ராமாமிருதம்

'ஐயோ பதினாலு ரூபாய்! என்னத்தைச் சொல்லி விட்டேன் இவ்வளவு ஆத்திரம் பொங்க! இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை ஆங்காரம் வேண்டாம்!'

எந்த வயதிலே? வயதுண்டோ தனக்கு? அவள் நெறித்த சொடுக்குகள் விரல்களினின்று சொடசொட வென்று உதிர்ந்தன. 'தன்னாலே ஒண்னும் ஆகாவிட்டா லும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது: காலையிலே கண்ணைத் திறந்தால் ராத்திரி கண்மூடறவரை, சகலத்துக்கும் கை பிடித்தே கொண்டு போய் விடவேண்டிருக்கிறது. இத்தனை சிசுருவுையின் நடுவில் இத்தனையும் போறாது போல் வேளையில் பாதி நேரம் ஊமை, வாயைத் திறந்தால் நிலா பச்சையா யிருக்கா? வெய்யில் பச்சையாயிருக்கான்னு தத்துப்பித் தென்று கைக்குழந்தை மாதிரி கேள்வி...'

அவள் பழிப்பதெல்லாம் அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம். அவன் நினைவு சட்டென்று இன்னொரு எண்ணத்தைத் தொட்டு அதில் முனைந்துவிட்டது.

ஊமையென்றதும் நினைவு, நேற்றிரவு கண்ட கனவில் ஊசிபோல் மறுபடியும் ஏறியது. மேற்கூறியவாறு, அவனாய்க் கற்பித்துக் கொண்ட பட்டைவீறும் பச்சை வெய்யிலில் பசும்புற்றரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில் தண்ணிரில் நனைய அண்ணாந்து படுத்திருந் தான். அவன் பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்ததோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.

அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம்போன்ற கண்கள் இவை.

நீங்காத மெளனம் நிறைந்து அம்மெளனத்திலேயே முழுகிப்போன வாய் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/13&oldid=590668" இலிருந்து மீள்விக்கப்பட்டது