பக்கம்:பச்சைக்கனவு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ιδgήί Ο Ι25

கதை சொல்லுவாங்க. கிணறு வெட்டறேன் ராசான்னு: ஒருத்தன் தோண்டிக்கிட்டே போனானாம், தண்ணி கண்ட பாடேயில்லே. தோண்டினவன் அப்புறம் மேலே வரவேயில்லியாம்! ஊர் நீர்வளம் அப்பிடி!

ஊரிலே உலாத்தற புத்திக்கும் தரித்திரத்துக்கும் குறைச்சலேயில்லே. புளியமரத்திலே புளியம் பழம் காய்க்குதுன்னா நம்பமாட்டானுங்க. பிசாசு தொங்கு தடான்னா எல்லாரும் ரெடியா நம்புவாங்க. உடம்புலே எவனும் சட்டை மாட்டக் கூடாது. கண்ணாலே சுட்டுடு வாங்க. இங்கே நாலெளுத்துக் கூட்டிப்படிக்கத் தெரிஞ்சவன் ஆதிசேசன். -

என்ன இருந்தாலும் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க. படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் புளைச்சாவணும். பசி எல்லாருக்கும் ஒண்னுதான்.

இந்த உசிர் இருக்கிறவரைக்கும், இந்த ஒரு சாண் வவுத்தை வளர்த்து எப்பிடியாவது புளைக்கணும்னு தானே, மனுசன் நாலுடேரோடே கூடறான், பிரியறான், சண்டை போடறான், சமாதானமாவறான்! இடை யிடையே மாரியாத்தா, வாந்திபேதி, ஒண்னுமில்லாட்டா வயசு எல்லாம் அவனை வாரியடிச்சுட்டுப் போவுது. அப்பவும் இந்த உசிரிலே இருக்கிற ஆசையை என்னான்னு, சொல்றது! எல்லாமே அதுலேதான் அடங்கியிருக்குதுங்க. சாமி, பூதம், பிசாசுகூட. பயிர் தண்ணிக்குக் காஞ்சா, கொடும்பாவி கட்டியிளுத்து அளுவறான். தண்ணி சாஸ்தியாப் போனா, கங்கம்மாளுக்கு ரவிக்கை, மஞ்சா, விளக்கு எல்லாம் முறத்திலே வெச்சு தண்ணியிலே விடறான். கோவமடங்கணும், வ | ழ ைவ க் க ணு ம் தாயேன்னு எல்லையம்மனுக்குப் பூசைபோடறான். என்னாத்துக்கு சொல்லவத்தேன்னா இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குதே அதிலே அவ்வளவு இருக்குதுஉடம்பிலே இருக்குதே அது உசிரில்லே நம்பிக்கைதான் உசிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/134&oldid=590792" இலிருந்து மீள்விக்கப்பட்டது