பக்கம்:பச்சைக்கனவு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சுமங்கல்யன்

"ஏவ்- ஏவ்!'

இடி குமுறுவது போன்று ஒரு ஏப்பத்தை விட்டு, தொப்பையைத் தடவி, சற்று எட்டவிருந்த செல்லத்தைக் கிட்ட நகர்த்தி...

இன்றைய சமையலே வெகு ஜோர்- பரவாயில்லை. குட்டி கை வாயிக்கிறது: மைசூர் ரஸமும், டாங்கர் பச்சடி. யும், அந்த கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும் நன்னா அமைஞ்சு போச்சு,

இந்தக் கத்திரிக்காயிருக்கே, இவள் திருத்திய மாதிரியே அலாதி. கதம்ப சாம்பாருடன் சேர்த்தாலோ? மொச்சைப் பருப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, வெங்காயம் எல்லாம் ஒன்றாய்ப் போட்டு, பருப்பைக் கொட்டி, தேங்காயும் அரைத்து விட்டு, அப்பளத்தையும் பொரித்துவிட்டால், ஆஹா? ஹாஹா; நாக்கில் ஜலம் சொட்டறது. ஆனால் இந்த வெங்காயத்தை தள்ள வேண்டியிருக்கே? ஒரொரு சமயமும் ஏண்டா காசிக்குப் போனோம் என்றிருக்கு. என்ன பண்ணுகிறது, போகிற வழிக்கும் புண்ணியம் தேட வேண்டியிருக்கே. வயது அப்படியே உட்காந்து கொண்டேயிருக்கிறதா?- சரிவெற்றிலையைப் போடலாமா? ஒரொரு காரியத்துக்கும் ஒரு ஒரு தர்மம் இருக்கிறது. வெற்றிலை போடுவதையும் சேர்த்துத்தான் பாக்கை ஊதி வாயுள் எறிந்து, மெல்ல அதுக்கிக் கொண்டே வெற்றிலையை தொடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/144&oldid=590802" இலிருந்து மீள்விக்கப்பட்டது