பக்கம்:பச்சைக்கனவு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 C லா. ச. ராமாமிருதம்

துடைத்து, காம்போடு நடு நரம்பை உரித்தெறிந்து விட்டு, சுண்ணாம்பைத் தடவி மடித்துக் கடைவாயில் கொடுத்து மெள்ள உள்ளே செலுத்தி. இந்த ககம் போடறவனுக்குத் தானே தெரியும்!

இந்த நாளில் யார் இப்படி அநுபவித்து வெற்றிலை போடறா? பெரிசிலேருந்து சிறிசு வரை பொம்மனாட்டி கள் உள்பட இப்ப எல்லாம் பீடா, கிள்ளி' என்று

அலையறதுகள். பழைய நாள் போல் எதுதான் இருக்கிறது? அந்த ஆரோக்கியமென்ன, ஆசாரமென்ன, பழைய காலமே காலந்தான்- வெற்றிலைப் பாக்கி

லிருந்தே பேசுவோம். அந்த நாளைய வாசமும் காரமுமா பிப்போ இருக்கிறதோ? உதடும் நாக்கும் எப்படிப் பற்றும்: இப்பொத்தான் சிவப்புக்கு என்னவோ ஒரு பென்சிலை யெடுத்து கண்ணாடிக்கெதிரில் ஒரு மணியா தீட்டிண்டு நிற்கிறதுகளே! பிறக்கிற போதே பீடி பிடிச்ச மாதிரி கறுப்பு உதடோடு பிறக்கிறதுகள்! பண்ணுவதெல்லாம் அக்கிரமம்! அல்பாயுசுக்கள். ஈர், பேன் நசுக்கிற மாதிரி மடிந்து விடுகிறதுகள்! உயிரோடு வளைய வரக்கூடத் துப்பில்லை கர்மம் கர்மம்! சரி, இருக்கிறவரைக்குமாவது சரியாயிருக்கிறதுகளா? உயிரை வாங்கி விடுகிறதுகள்.

பாறேன், இந்தக் குட்டிக்குமுன் அந்த வத்சலை யிருந்ததே அதன் கிட்டவிருந்து தப்பிச்சாலே போது மென்று ஆய்விட்டது. மூணு வருஷத்துக்குள் மூச்சு திணறிப் போச்ச. ஏதோ படித்த பெண்ணாயிருக்கே, நீக்குப் போக்குத் தெரிந்து நுட்பமான மணலறிஞ்சு நடக்கும் என்று கட்டிக் கொண்டது போக, அது பணத்தைத் தண்ணிக் கணக்கில் வாரிவிட்ட தினுசைப் பார்த்தால் பத்துக் குழந்தை பெற்ற சம்சாரி கெட்டான் போ! ஏதேது, மனசு நோகடிப்பில் அவளை நானே முந்திக்கொண்டு விடுவேனோ போல் அல்லவா ஆயிடுத்து! எத்தனை தினுசு புடவை, வாசனைத்தைலம், ஸ்நோ, கொண்டை ஊசி, பவுடர் கண்ணாறாவி! இத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/145&oldid=590803" இலிருந்து மீள்விக்கப்பட்டது