பக்கம்:பச்சைக்கனவு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி O 159

அவள் கைகளை இறுகப் பற்றித் தன் கழுத்தைச் சுற்றி வைத்துக்கொண்டான். அவள் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அவள் விழிகள் திடீரென நிறைந்தன. இரு துளிகள் விழியோரம் திரண்டு உருண்டு, கன்னங்களில் வழிந்து, அவன் புறங்கை மேல் விழுந்து, விழுந்த இடத்தைச் சுட்டு எரித்தன.

அவனைப் பிடித்த வெறியும் சட்டென விட்டது. அவளைப் பிடித்த பிடி தளர்ந்தது. கீழே விழுந்த நோட்டுப் புத்தகத்தையும் அத்துடன் நூலோடு கட்டிய பென்சிலையும் குனிந்து எடுக்க முயன்றாள். அவன் எடுத்துக் கொடுத்தான். அவள் எழுதினாள்.

'நான் விதவை." அவனைக் கன்னத்தில் அறைந்தாற் போலிருந்தது. வெளித் தாழ்வாரத்தில் ஒர் ஆள் மணியை அடித்துக் கொண்டே கூவிக்கொண்டு போனான்.

"எல்லாரும் வெளியே போகலாம்.'

நம்மை நாம் சும்மா விடுவதேயில்லை. நம்மையே நாம் சுற்றிக் கொண்டேதான் இருப்போம். எத்தனை தடவை அடிப்பட்டுக் கீழே விழுந்து புரண்டாலும், மண்ணைத் தட்டிக்கொண்டு, மறுபடியும் எழுந்து கொணடுதான் இருப்போம். நம்பிக்கை என்னும் சிறு பொறிக்கு அவ்வளவு வேகம்.

மிருகக்காட்சி சாலையில் மாலையில் இருவரும் ஒரு கல்பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்த இடத்துக்கு அருகே, மடக்கி விட்டிருந்த ஜலத்தில், மரப்பாலத்தின் கமானுக்கு அடியில் ஒடங்கள் ஊர்ந்தன. கட்டடங்களின் தடங்கல்கள் இல்லாது வானவிசலாம் அங்கே கவிந் திருந்தது. இடமும் வேளையும் ஓசைகளும் இன்பமாய் இதமாக இழைந்தன

அருகே பாகன் யானையை நடத்திச் சென்றான். அதன் துதிக்கை ஒரு கணமேனும் சும்மா இல்லை. பூமியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/168&oldid=590826" இலிருந்து மீள்விக்கப்பட்டது