பக்கம்:பச்சைக்கனவு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி () 167

இதோ வேலைக்குப் போகும் வேளை வந்துவிட்டது. போகிறேன். வயிற்றுப் பிழைப்பில் மனம் முனைவதில் வீட்டுக் கவலையை மறக்க மாட்டேனோ?

வீட்டில் இப்போது அவள் என்ன செய்து கொண் டிருப்பாள்? என்னத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாள்? என்னைப்பற்றியா, என் மனைவியைப் பற்றியா? அல்லது...

இப்பொழுது என் புது வாழ்வில், இறந்து போனவள் ஏன் புகுகிறாள்? நான் இருப்பவளை விட்டு இறந்து போனவளை ஏன் நினைக்கிறேன்? அவள் எந்த விஷயத்தில் இவளைவிட உயர்ந்தவள்? மெய்ம்மறக்கும் நிலையில் வைக்கும் விஷயங்களைப்பற்றி அவளோடு பேசினால், ஏதாவது சம்பந்தமில்லாமல் குழாயில் தண்ணிர் வரவில்லை என்று முணுமுணுப்பாளே! இறந்துபோன பின்னர் அவளுக்கு என் மனத்தில் ஆடிக் கொண்டிருக்கும்படி என்னிடம் என்ன அவ்வளவு அக்கறை? ஒரு வேளை அவள் இறந்தபோது அவளை நான் அறியாமல்; இப்பொதுதான் எனக்குப் புரிந்து கொண்டிருக்கிறாளா?

தோ மாலை வருகிறது. நான் வீடுபோய்ச் சேர வேண்டும். இவள் முகத்தில் விழித்தாகவேண்டும். இவள் முகம் திருப்தியாக இல்லை. இன்றைய பொழுதை இவளும் என்போல் குருட்டுச் சிந்தனையில்தான் போக்கி யிருக்கிறாள். நான் என் மனைவியைப் பற்றி நினைப்பது போல் இவளும் தன் கணவனைப் பற்றிய நினைவுகளைப் பட்டுக் கொண்டிருந்திருப்பாள்.

ஆயினும், எப்படி, எதைக் கேட்க முடிகிறது? ஓயாமல் ஒருத்தருக்கொருத்தர் மெளனமாய்ப் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஒருவரை ஒருவர் விட்டுத் தனியாகவும் இருக்க முடியவில்லை. கிட்டவும் இருக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/176&oldid=590834" இலிருந்து மீள்விக்கப்பட்டது