பக்கம்:பச்சைக்கனவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 0 லா. ச. ராமாமிருதம்

'அதெல்லாம் ஒண்னுமில்லை,” எ ன் ற | ள். குருடனைக் கலியாணம் பண்ணிக்கொள்ள திக்கென்று தானிருந்தது. ஆயினும் அவளும் அவள் தம்பியும் மானமாய்க் காலம் தள்ளுவதே தவிப்பாயிருந்த சமயத்தில் தனக்கு இடம் அந்தஸ்து எல்லாம் கொடுத்துதவியதை மறக்க முடியுமா? எவ்வளவு நல்லவர் கண்ணொன்றில்லை தவிர மற்றெதில் அவரிடம் குறை?

ஆயினும் அவள் மனதில் தோன்றியது நன்றியா அல்லது ஆசையா?

சே, என்ன சங்கடமான கேள்வியெல்லாம் கேட்கிறது. இந்தக் குழந்தை!

கொஞ்சநாழி ஜன்னலுக்கு வெளிப்பக்கமாய் முகத் தைத் திருப்பிக்கொண்டிருந்தாள்.

'உனக்கு ஒரு மூத்தாள் இருந்தாள் என்று உனக்குத் தெரியுமோ?”

அவளுக்குத் துரக்கிவாரிப் போட்டது. தனக்கு மூத்தாளிருக்கும்படி அவருக்கு அவ்வளவு வயதாகிவிட வில்லையே! இன்னமும் இருக்கிறாளா? அவரைப்பற்றி அவளுக்கென்ன தெரியும்?

'எங்கள் கலியாணம் கிராமாந்தரக் கலியாணம். அவள் பிறந்த வீடு அடுத்த தெருவுதான். எனக்குக் கண் போவதற்கு முன்னாலேயே கலியாணம் நடந்துவிட்டது. என் தகப்பனார் வைதீகம். சாரதா சட்டம் அமுலுக்கு வருமுன்னர் அதைச் சபித்துக்கொண்டு நடந்த அவசரக் கலியாணம். எனக்கு அவளை என் கண்ணிருக்கையிலேயே சரியாய்க் கண்ட நினைவில்லை. எல்லாவற்றையும் மறைத்த ஒமப்புகையும் வைதீகக் கூட்டமும்தான் ஞாபக மிருக்கிறது.

ஆனால் கலியாணமான பிறகுதான் குட்டு வெளியா யிற்று. பெண்ணுக்குப் பேச்சுக் கொச்சையாய்க்கூட வரவில்லை. படு ஊமை. அத்துடன் படு செவிடு. குண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/19&oldid=590675" இலிருந்து மீள்விக்கப்பட்டது