பக்கம்:பச்சைக்கனவு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 35

சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப்போல் சுறிலெனப் பொரித்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.

திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண் முன் நிற்கிறது அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காrதி குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி, குளவி யாகக் கொட்டும் மணலும், கோபக் கண்போல், சமுத்திரத் இன் சிவப்பும், அலைகளின் சுழிப்பும், அடிபட்ட நாய் போல் காற்றின் ஊளையும் பிணத்தண்டை பெண்கள் போல ஆடி, ஆடி அலைந்து, அலைந்து, மரங்கள் அழும் கோரமும்!

இத்தனைக்கும் மூலகாரணியோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்து விடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகைபோல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்த்துக் கொண்டு நின்றன. மின்னலின் வழி. விசும்பினின்றிழிந்த விண்ணுலகத்தவன் போலிருந்தாள். ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல், காற்றின் மிகுதியில் நகத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து, புயலுடன் நின்றாள்.

மின்னல் மறைந்தது.

வெடவெடக்கும் குளிரில் பற்கள் கிலுகிலுப்பைக் கற்கள் போல் கடகடக்க ஆரம்பித்துவிட்டன. புயல் எங்களை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போயிற்று. உடலில் பிசினாய் ஒட்டிக் கொண்ட ஆடையைக் களைந்து வேறு உடுத்துவதற்குள் போதும்போதும் ஆகிவிட்டது.

காலையில் எழுந்திருக்கையிலேயே வெகுநேரமாதி விட்டது. உடல் கனுக்கணுவாய்த் தெறிக்கும் வலியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/44&oldid=590702" இலிருந்து மீள்விக்கப்பட்டது