பக்கம்:பச்சைக்கனவு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 o லா. ச. ராமாமிருதம்

எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவள் எழுந்திருக்க வில்லை.

'கடற்கரைக்கு உலாவப்போனது எப்படியிருக் இறது?’ என்றேன். கண்கள் மூடியபடியே புன்னகை புரிந்தாள். அவசரமாய் வேலைக்குப் போனேன்.

நான் மாலை திரும்புகையில் வீட்டில் சந்தடியில்லை. கட்டிலில் நான் விட்டுப் போனபடியே படுத்திருந்தான். கண் திறக்கவில்லை. பகீரென்றது.

என்னடி!' நெற்றியில் கை வைத்தேன். மழுவாய்க் காய்ந்தது. மூச்சிருந்ததேயொழிய பேச்சில்லை. கருமான் பட்டரை போல் ஆவியடிக்கும் அனல் மூச்சு.

டாக்டர் வந்து என்னவோ புரட்டிப் புரட்டி பரிகூைடி செய்து பார்த்தார். ஸ்மரணையற்று, போட்டது போட்டபடி கிடந்தது அந்த உடம்பு நின்ற இடத்தில் நிற்காது துருதுருக்கும் உடம்பு

'இது நீங்கள் ஒண்டியாய் சமாளிக்க முடியாது' என்றார். மூஞ்சியை முழநீளம் வைத்துக் கொண்டு, :ஆஸ்பத்திரி.”

ஆஸ்-பத்-தி-ரி?” நேற்றிரவு வெறி பிடித்து விளையாடினோம். இன்று: ஆஸ்பத்திரி!

'விஷயம் முற்றிவிட்டது ஸார். வீட்டில் பெரியவான் யாராவது இருந்தால் வரவழையுங்கள்.”

அம்மாவுக்குத் தந்தியா? நான் என்னுள் ஒடுங்கிப் போனேன்.

"ஆஸ்பத்திரியில்கூட கூட்டத்தில் கோவிந்தா ஆகி விடும். வீட்டில் பெரியவாள் யாராவது இருக்கட்டும். நான் வந்து பார்க்கிறேன், என்னவோ?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/45&oldid=590703" இலிருந்து மீள்விக்கப்பட்டது