பக்கம்:பச்சைக்கனவு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசும் விரல் O 51

பார்வையிழந்து அவன் இன்னும் அங்கேயே நின்றான். வெய்யிலில் பூமி வெந்தது. இதயச்சதையை ஏதோ கொக்கி மாட்டி இழுத்துப் பிடுங்கி பட்டை உரித்தது. கோரமானதோர் சத்தம் தொண்டையிலிருந்து பீறிட்டது. அந்த அதிர்ச்சியில் தேகம் கிடுகிடென ஆடிற்று. விழியோரங்களை எரித்துக் கொண்டே இரு அனல் துளிகள் கிளம்பி, கன்னங்களில் வழிந்து, மோவாயினின்று உதிர்ந்து, பூமி இஞ்சி, மண்ணில் மறைந்தன.

காலடியில் பயனற்ற நான்கு கண்ணாடித் துண்டுகள் பளபளவென மின்னிக்கொண்டு கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/60&oldid=590718" இலிருந்து மீள்விக்கப்பட்டது