பக்கம்:பச்சைக்கனவு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முலு 0 83

மல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ? புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.

குழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.

  • மன்னி மன்னி!' 'ஊம்-? ஆ-?' உள்ளிருந்து கொட்டாவிகள் கிளம்பின.

"மன்னி!- தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு'

'இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன்!" மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.

'இதென்ன அக்கிரமம்! பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன?’ என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

"பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான்' என்றாள் மதுரம்.

'உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவை :புடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும்.'

'விடிஞ்சா அ மா வா ைச. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/62&oldid=590720" இலிருந்து மீள்விக்கப்பட்டது